அன்பே சிவம் VS THEISM !

 (DISCLAIMER: என் அனுபவத்தில் தெரிந்ததை எழுதியிருக்கிறேன்,யார் மனதையும் புன்படுத்தினால்,உங்கள் நம்பிக்கையை, நீங்களாக கைவிட்டால் மட்டுமே போகுமே தவிற,மற்றவர் சொல்வதனால் நம்பிக்கை போய்விடாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.)


நம்பிக்கை என்று எல்லோருக்கும் உண்டு.பொதுவாக கடவுள் மேல் வைக்கப்படும் நம்பிக்கை மட்டும் தான் நம்பிக்கையாக பார்க்கப் படுகிறது.

கடவுள் நம்பிக்கை உடையவர்களை DEISTS  என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். இவர்கள் தனக்கு பிடித்த ஒரு கடவுளை தேர்ந்தெடுத்து,அந்தக் கடவுள் மேல் நம்பிக்கை வைத்து வாழ்க்கையை நடத்துவார்கள்.

கடவுள் என்று எதுவும் இல்லை என்பவர்களை நம்பிக்கை என்றே ஒன்றும் இல்லாதவர்களாக பார்க்கப்படுகிறது. கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களை ATHEISTS என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள்.இவர்களுக்கும் நம்பிக்கை உண்டு,அறிவியலை நம்புவார்கள்.

இவர்கள் கடவுளை நம்புகிறவர்களை ,மூட நம்பிக்கை உள்ளவர்கள் என்று சொல்வது உண்டு. ATHEISTS இல்,  சிலர் அறிவியல் நன்கு அறிந்தவர்களாக இருப்பார்கள்,சிலருக்கு கடவுள் நம்புவதற்கு ஆதாரம் இருக்காததால் நம்பிக்கை இல்லாதவர்களாக இருப்பார்கள்.

சிலருக்கு தன் வாழ்க்கையில் நடந்த துயர சம்பவத்திற்குப்பின் கடவுள் மீது நம்பிக்கை இழந்தவர்களாக இருப்பார்கள். இவர்கள் கடவுள் மீது நம்பிக்கை வைக்க எதிர்பார்ப்பது எல்லாம் ஒருவித magic, impossible விஷயம்,அறிவியலால் கூட சொல்லமுடியாத ஒரு விஷயம் நடக்கவேண்டும் எனபதுதான்.

வாழ்க்கையில் நடந்த எதோ துயர சம்பவத்திற்குப்பின்,  கடவுள் மீது நம்பிக்கை இழந்தவர்கள் எல்லாம், ஒருகாலத்தில் கடவுள் மீது அதீத நம்பிக்கை கொண்டவர்களாக இருந்திருப்பார்கள். 

அந்த பயபக்தியை உடைத்து ,கடவுள் இல்லை என்று திசை திரும்புவது சாதாரண விஷயம் அல்ல.இதற்கு மிகப்பெரிய தைரியம் வேண்டும்.

கடவுள் என்று ஒன்றும் இல்லை என்று  சொல்வது,முதலில் கோபமாக ஒருபக்கம் இருந்தாலும் ,காலப்போக்கில் கோபம் விலகி கடவுள் இருப்பதற்கான கேள்விகள் கேட்கத் தொடங்குவார்கள்.

இவர்கள் பதில்களை தேடுபவர்களாக இருப்பார்கள்.காரணம் ஏதோ ஒன்றின் மீது நம்பிக்கை இருந்ததால்,வேறெதாவது ஒன்றில் முழுவதுமாக  ஈடுபாடு செலுத்த பதில் தேடிக்கொண்டே இருப்பார்கள்.

இவர்கள் கடைசியில், கடவுள் சிலைகளில் இல்லை,கோவில்களில் இல்லை, எனக்குள்ளும் உனக்குள்ளும் இருக்கிறது என்பார்கள்.சிலைகள் எல்லாம் சிலைகளாக மட்டும்தான் இவர்களுக்குத் தெரியும்,அதில் எந்த மாற்றமும் இல்லை.அன்பே சிவம் படத்தில் வருகின்ற ,

'நாத்திகம் பேசும் நல்லவருக்கு அன்பே சிவமாகும்'

வரிகள் போல் இருப்பார்கள். காரணம் ,இவர்கள் பெரும்பாலும் அன்புக்காக ஏங்குபவர்களாக இருப்பார்கள். Self care,மன நிம்மதி,வாழ்க்கையில் சந்தோஷமாக இருக்கலாம் என்று நினைப்பார்கள்.

அதுமட்டுமின்றி,இவர்கள் கோயில் ,கடவுள் பற்றிய ஒரு தெளிவு வைத்திருப்பார்கள்.ஏன் கோயில்கள் இருக்கிறது?,ஏன் கடவுள் என்று அங்கு வைக்கப்பட்டு மக்கள் அங்கு ஏன் சென்று வணங்குகிறார்கள்? என்ற கேள்வி பெரும்பாலும் எல்லோருக்கும் இருக்கும்.

ஏன் கோயில்கள் இருக்கிறது?

இந்த கேள்வி கடவுள் நம்பிக்கை உடையவர்களுக்கு வராது.இவர்கள் தன் வாழ்க்கையில் எந்த வித கஷ்டங்கள் வந்தாலும் கடவுள் மீது பாரத்தை இறக்கி வைத்துவிடுவார்கள்.

இவர்கள் எதையும் கேள்விக் கேக்காமல் நம்பிக்கை வைப்பவர்கள்.கடவுள் துணை இருப்பதாக நம்புவார்கள்.அதனால் அவர் நம்பிக்கை மீது ஒருபோதும் கேள்விகள் வைக்கமாட்டார்கள்.இது போன்ற நம்பிக்கைகள் ஓரளவு வரை நல்லதுதான்.

சரி,கோயில் கடவுள் எதற்கு என்ற கேள்வியின் பதிலுக்கு வருவோம். பொதுவாக ‘எண்ணம் போல் வாழ்க்கை’ என்கிற கருத்து சொல்லப்பட்டு வருகிறது.இதற்கும் கோயில்களுக்கும் சம்பந்தம் உள்ளதாக நினைக்கிறேன். 

எப்பொழுதும் புலம்பிக் கொண்டே இருப்பவனை சுற்றி ஒருவித negative vibes இருந்து கொண்டே இருக்கும்,இவனுக்கு பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைத்த பின்பும் வராத பிர்ச்சினையை நினைத்து அழுது கொண்டே இருப்பான்.இவன் போன்றவர்களால் ,இவன் பக்கத்தில் இருப்பவர்களுக்கும் ஆபத்து.

அதுவே ஒருவன் எப்பொழுதும் நல்லதுதான் நடக்கும் என்று எண்ணுபவன்,தனக்கு வரும் பிரச்சினைகளை ,பயம் இருந்தும் அதை எதிர்கொண்டு சமாளிப்பவனாக இருப்பான்.இவனை சுற்றி உள்ளவர்களுக்கு இவன் ஒரு ஆறுதலாக இருப்பான்.

நாம் கோயிலை தவிற வேறு இடங்களில் இருக்கிற பொழுது, நம்மை அறியாமல் நமக்கு கெட்டதாக இது நடந்துவிட்டால் போய் சேர்ந்துவிடலாம்,கெட்ட வார்த்தைகளை பயன்படுத்துவது,மற்றவர்கள் பார்த்து பொறாமை படுவது போன்று கெட்ட எண்ணங்கள் தோன்றும். அதுவே ,எவ்வளவு கெட்ட எண்ணங்கள் நினைத்திருந்தாலும்,நாம் கோயிலுக்குள் சென்றவுடன், 'கடவுளே அது சரியில்லை,கொஞ்சம் நீதான் பார்க்க வேண்டும், நல்லதை கொடு‘என்று மனம் மாறிவிடும்.கடவுளிடம் பேசிவிட்டு வந்தபின், நம் மனது ஏதோ பாரத்தை இறக்கி வைத்ததது போல இருக்கும்.ஒரு தெளிவு கிடைத்தது போல உணர்வோம்.ஒருவித positive vibes கிடைக்கும்.நம் எண்ணங்கள் சுத்தமாக்குவதற்காகத்தான் கோயில்கள் இருக்கிறது. இது நம்மை அறியாமல் நடக்கும் விஷயம்.

இன்னொரு உதாரணம்,ஊர்த்திருவிழாக்களை எடுத்துக்கொள்ளுங்கள், சொந்தபந்தங்களை எல்லாம் சேர்த்து ஒன்றாக கோயிலுக்கு சென்று,கிடா வெட்டி, ஒன்றாக இருந்து விளையாடி நாம் சாப்பிடும்போது ,எவ்வளவு கஷ்டங்கள் இருந்தாலும், அன்று மட்டும் அவ்வளவு சந்தோஷமாக இருக்கும்.எந்தவித கெட்ட எண்ணங்களும் வராது.

நமக்கு அன்றாட நடக்கும் விஷயங்களுக்கு இருவித break  கு தான் இந்த கோயில்கள் விழாக்கள் எல்லாம். நல்லது கெட்டது எதுவாக இருப்பினும் எல்லாருக்கும் தகவல் சொல்லப்படுவதற்கான காரணமும் இதுதான். பக்கத்தில் எல்லோரும் இருக்கும்போது ஒருவித ஆறுதல் கிடைக்கும்.இதே போல்தான் ,கடவுளும் தன்னிடம் இருப்பதாக நினைப்பார்கள்.

அவரவர் நம்பிக்கை அவரவருக்கு!

”அன்பின் பாதை சேர்ந்தவனுக்கு முடிவே இல்லையடா,
மனதின் நீளம் எதுவோ அதுவே வாழ்வின் நீளமடா”

ஆதலால்,   எண்ணம்போல் மட்டும் தான் வாழ்க்கை!


-ரோகிணி.

Comments

Popular posts from this blog

மரணபயம் in ‘The Bad Place’

J.Krishnamurti to Himself- Part 2

வழக்கு எண் :10/10