Posts

Showing posts with the label lifestory

அன்பே சிவம் VS THEISM !

Image
 ( DISCLAIMER: என் அனுபவத்தில் தெரிந்ததை எழுதியிருக்கிறேன்,யார் மனதையும் புன்படுத்தினால்,உங்கள் நம்பிக்கையை, நீங்களாக கைவிட்டால் மட்டுமே போகுமே தவிற,மற்றவர் சொல்வதனால் நம்பிக்கை போய்விடாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.) நம்பிக்கை என்று எல்லோருக்கும் உண்டு.பொதுவாக கடவுள் மேல் வைக்கப்படும் நம்பிக்கை மட்டும் தான் நம்பிக்கையாக பார்க்கப் படுகிறது. கடவுள் நம்பிக்கை உடையவர்களை DEISTS   என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். இவர்கள் தனக்கு பிடித்த ஒரு கடவுளை தேர்ந்தெடுத்து,அந்தக் கடவுள் மேல் நம்பிக்கை வைத்து வாழ்க்கையை நடத்துவார்கள். கடவுள் என்று எதுவும் இல்லை என்பவர்களை நம்பிக்கை என்றே ஒன்றும் இல்லாதவர்களாக பார்க்கப்படுகிறது. கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களை  ATHEISTS  என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள்.இவர்களுக்கும் நம்பிக்கை உண்டு,அறிவியலை நம்புவார்கள். இவர்கள் கடவுளை நம்புகிறவர்களை ,மூட நம்பிக்கை உள்ளவர்கள் என்று சொல்வது உண்டு. ATHEISTS இல்,   சிலர் அறிவியல் நன்கு அறிந்தவர்களாக இருப்பார்கள்,சிலருக்கு கடவுள் நம்புவதற்கு ஆதாரம் இருக்காததால் நம்பிக்கை இல்லாதவர்களாக இருப்பார்கள்...

Let me tell you a குட்டி story !

Image
காலை ஏழு மணி, “வண்டி எண்:1410,சென்னை to   ஈரோடு செல்ல இருக்கும்..” ஒளியெழுப்பிக்கொண்டிருந்த இரயில் நிலையத்தில், “10 நிமிடம் வண்டி லேட்”என்றான் இராமு, யாரென்று தெரியாமலே தலையாட்டிக் கொண்டு தனது கைப்பேசியை திறந்தான் சிவா. “சாயா சாயா சாயா”இடித்துவிட்டுச் சென்றவனை   பார்த்துக் கொண்டு நின்றான் வாசு, கொட்டாவியோடு பறந்த ஆவி தேநீரை பருகிக்கொண்டிருந்த வண்ணம் போர்ட்டர்கள், இவர்களுக்கு ஓரத்தில் ஒருவன் போர்வையை தலை வரை போர்த்தி உறங்கிக் கொண்டிருந்தான். தடம் பாய்ந்து கொண்டு ரயில் பெட்டிகள் வந்தது. உறங்கிகொண்டிருந்தவனின் கனவு பெட்டிச் சத்தத்தில், அப்படியே களைந்தது.படுத்திருந்தவாறு எல்லாரும் வண்டி ஏறுவதை பார்த்துக் கொண்டிருந்தான். வண்டி 5 நிமிடம் தான் நிற்கும் என்பதால்,எல்லோரும் தடபுடலாக ஓடி ஏறினார்கள். அப்புறமென்ன,வண்டி கிளம்பியவுடன்,மீண்டும் அவன் உறங்கச் சென்றான். வாழ்க்கை அவ்வள்வுதான்,   கதையும் அவ்வளவுதான். எல்லாரும் வேலையைப் போய் பாருங்கள் அல்லது உறங்கச் செல்லுங்கள். -ரோகிணி              ...