Let me tell you a குட்டி story !



காலை ஏழு மணி,

“வண்டி எண்:1410,சென்னை to  ஈரோடு செல்ல இருக்கும்..”

ஒளியெழுப்பிக்கொண்டிருந்த இரயில் நிலையத்தில்,

“10 நிமிடம் வண்டி லேட்”என்றான் இராமு,

யாரென்று தெரியாமலே தலையாட்டிக் கொண்டு தனது கைப்பேசியை திறந்தான் சிவா.

“சாயா சாயா சாயா”இடித்துவிட்டுச் சென்றவனை  பார்த்துக் கொண்டு நின்றான் வாசு,

கொட்டாவியோடு பறந்த ஆவி தேநீரை பருகிக்கொண்டிருந்த வண்ணம் போர்ட்டர்கள்,

இவர்களுக்கு ஓரத்தில் ஒருவன் போர்வையை தலை வரை போர்த்தி உறங்கிக் கொண்டிருந்தான்.

தடம் பாய்ந்து கொண்டு ரயில் பெட்டிகள் வந்தது.

உறங்கிகொண்டிருந்தவனின் கனவு பெட்டிச் சத்தத்தில், அப்படியே களைந்தது.படுத்திருந்தவாறு எல்லாரும் வண்டி ஏறுவதை பார்த்துக் கொண்டிருந்தான்.

வண்டி 5 நிமிடம் தான் நிற்கும் என்பதால்,எல்லோரும் தடபுடலாக ஓடி ஏறினார்கள்.

அப்புறமென்ன,வண்டி கிளம்பியவுடன்,மீண்டும் அவன் உறங்கச் சென்றான்.

வாழ்க்கை அவ்வள்வுதான்,  கதையும் அவ்வளவுதான்.

எல்லாரும் வேலையைப் போய் பாருங்கள் அல்லது உறங்கச் செல்லுங்கள்.

-ரோகிணி                            

Comments

Post a Comment

Popular posts from this blog

மரணபயம் in ‘The Bad Place’

J.Krishnamurti to Himself- Part 2

வழக்கு எண் :10/10