மரணபயம் in ‘The Bad Place’
ஐயமார்களோடு சென்னிமலையில் இருந்து 20 பேரும் அம்மன் தரிசனம் காண வருவார்கள். இவர்கள் எல்லாம் சுப்பு’சாமி’ என்று ஒருவர் தன் தலைமையில் அழைத்து வருவார். அன்று இரவு அம்மன் அபிசேகம் மாலை இவரோட செலவு.
தீவிரமான முருகர் பக்தர். எவ்வளவு தீவிரம் என்றால் , அவர் வீட்டுக்கு பூட்டு கிடையாது. வீட்டின் பூஜை அறையில் எல்லா பணக்கட்டுகளும் ஒரு தட்டில் வைத்திருப்பார். யாருமில்லாத நேரத்தில் அவர் வீட்டில் நிறைய முறை பணம் திருடு போயிருக்கிறது. திருடு போகும் ஒவ்வொரு முறையும் மலைக்கு சென்று ஒரு சாட்டையை முருகன் தலைக்கு மேல் கட்டி விடுவார். அப்படி செய்வதனால், திருடியவர்கள் திரும்ப வந்து உண்மை சொல்லி மன்னிப்புக் கேட்டிருப்பதாக அந்த ஊர் மக்கள் சொல்கிறார்கள். இதனால், அந்த ஊர் மக்களுக்கு இவர்மீதும் இவருக்கு முருகனின் அருள் இருப்பதாக நம்புவதனால் ஒரு மரியாதை இருக்கிறது.
அது மட்டுமின்றி பெரிய கோயில்களில் அன்னதான செலவு இவர் எடுத்து செய்வதுண்டு. கொரானா காலத்தில், தன் வீட்டில் சமைத்து, சென்னிமலை பெருந்துறையில் சேவையில் இருந்த காவல்துறையினருக்கு உணவு வழங்கினார். அன்னதானம் செய்வதில் இவருக்கு அளவற்ற பிரியம். ரயில் துறையில் வேளை செய்கிறார். தனக்கென்று ஒரு ரூபாயும் இன்று வரை சேர்த்து வைப்பதில்லை.
இவரை நான் வருடத்திற்கு ஒரு முறை கோயிலுக்கு வரும்போதுதான் சந்திப்பதுண்டு. நம் ஊருக்கு வரும் ‘சாமி’யோடு 20 பேருக்கு நம் வீட்டில் தான் இரவு உணவு. இரவு 9 மணி போல் வந்து உணவு உண்டுவிட்டு கோயிலுக்கு செல்வார்கள். அழங்காரம் செய்து தரிசனம் பார்க்க இரவு 2 மணி ஆகிவிடும்.
என் தாத்தா ஊர்த்தலைவராக இருந்தார். அவருக்கு பின், இப்போது என் அப்பா தலைவராக இருக்கிறார். அதனால், கோயிலுக்கு வரச்சொல்லி ‘சாமி’ அழைப்பார். கடந்த ஆண்டுக்கு முந்தைய ஆண்டு முதல்முறை இரவு வரை இருந்து வந்தேன். கடந்த ஆண்டு, ‘சாமி’ அபிசேகத்திற்கு பால் கொடுக்கனும் என்று சொன்னதால் உடன் சென்றேன். நாங்க்ள் எல்லோரும் பூஜை சாமான்க்ளோடு கோயில் நோக்கி நகர்ந்தோம். அப்போது மணி 10.30 இருக்கும். சாமியிடம் ஏன் இந்தமுறை இவ்வளவு தாமதம் என்று கேட்டுக்கொண்டே சென்றேன். பால் வாங்கி வர நேரமாகிவிட்டதாக சொன்னார். நீங்க பூஜை முடித்து கிளம்ப நேரமாகிடும் என்று சொன்னேன்.
‘ஆமா, அந்த நேரத்துல போக பயமா இருக்கும்’ என்று சாமி சொன்னார்.
‘என்ன பயம் சாமி?’ என்று புரியாததால் கேட்டேன்.
‘திடீர்னு எதாச்சு ஆயிடுமோனு பயம்தான்…’ என்றார்.
‘வயது காரணமா எதாச்சு ஆயிடும் பயமா சொல்றீங்க சாமி?’, புரிந்து கொள்ள மீண்டும் கேட்டேன்.
‘ஆமா சாமி, அடிக்கடி, உடம்புக்கு ஏதாச்சு ஆயிடுமோனு பயமா இருக்கு..பதட்டம் ஆகுது..’ என்று சொன்னார்.
கடவுள் மீது இவ்வளவு அதீத பக்தியுள்ள ஒருவருக்கு எப்படி மரணம் ரீதியான ஒரு பயம் சாதாரணமாக வரும்…என்ற சிந்தனை என் மண்டைக்குள் ஓடியது. இதற்கு தெளிவான நல்ல பதிலை சொல்ல முற்பட்டேன். பதிலில் மேலும் பயம் கொடுத்துவிடக் கூடாது எனபதில் கவனமாக இருந்த்தேன்.
ஒரு பதில் சொன்னேன்,
‘சாமி, நீங்க நல்லா இருக்கனும் நு நினைப்பாங்கள..அது உங்கள வாழ வைக்கும்..’
அதற்குள் கோயில் வந்த்து, நாங்கள் பூஜை முடிந்து எல்லோரும் 3 மணி போல வீட்டுக்கு சென்று விட்டோம்.
அதன் பின் பல மாதங்கள் ஓடிவிட்டது…
------------------------------ 2 ---------------------------------
எனக்கு சென்னிமலையில் ஒரு தோழி இருக்கிறார். அவ்வப்போது அழைத்து பேசுவது வழக்கம். கடந்த மாதம் தன் வீட்டு விசேசத்துக்கு அழைத்திருந்தபோது, ‘சாமி’ கு பாம்பு கடித்து ரொம்ப முடியாம இருப்பதாக சொன்னார். பாம்பு கடித்து இருபது நாட்கள் ஆகியாதகவும் , தற்போது கோவை அழைத்து சென்றிருப்பதாகவும் சொன்னார்.
பதினந்து நாடகளுக்கு பின், ‘சாமி நல்லா இருப்பதாக’ என் அப்பாவிற்கு அழைப்பு வந்தது. நாங்கள் பார்ப்பதற்காக சென்றிருந்தோம்.
அப்போது, ‘என்ன பாம்பு சாமி கடிச்சுது உங்கள?’ என்று கேட்டேன்.
‘ கடூவீரன் கொத்திட்டு அப்படியே போயிடுச்சு.. அந்த பாம்பு சாகரவனதா கடிக்குமாமா.. நான் எப்படி பொழச்சேனே தெரியல..’ என்று சொன்னார்.
------------------------------ 3 ---------------------------------
ஆங்கிலத்தில் ‘The Good Place’ என்று நாடகம் உள்ளது. அங்கு Good place மற்றும் Bad place என்று இரண்டு இடம் இருக்கும். Good place என்பது சொர்க்கம், அங்கு நினைப்பதெல்லாம் கிடைக்கும்.
Bad place என்பது நரகம், அங்கு வரும் உயிர்களை அவர்கள் கொடூரமான முறையில் உளைச்சல் கொடுத்துக் கொண்டே இருப்பார்கள். அந்த நாடகம் இளம் வயதினர் நான்கு பேரை சுற்றி நடக்கும். அவர்க்ளின் பாவக்கணக்கு படி அவர்களை The Bad Place கு தள்ளப் படுவார்கள். அங்கு நடக்கும் கொடூரத்தில் இருந்த்து தப்பிக்க, பல இன்னல்களைத் தாண்டி Good place கு செல்ல முயற்சிப்பார்கள். Good place கு சென்றும் அடைவார்கள்.
அவர்கள் நினைத்தது போன்று இல்லாமல், Good place ல் உள்ளவர்கள் எல்லாம் கிடைத்து சழித்து போய் வாழ்க்கை முடிவில்லாத ஒரு வேதனையில் இருப்பார்கள். அப்போது தான், இந்த நான்கு பேரும் ஒரு கதவை உருவாக்குவார்கள். அந்த கதவுக்குப்பின், வேரு உலகம் கிடையாது. வாழ்ந்த்து போதும் என்னும் பொழுது, அந்தக் கதவுக்குள் சென்று வாழ்க்கை முடித்துக் கொள்வார்கள்.
அதுவே Bad place ல், மரண பயம் கொடுக்கும் அளவுக்கு தண்டனைகள் இருந்தாலும், மரணமே இல்லையே என்கிற பயம் இருந்து கொண்டே இருக்கும். இந்த இரண்டு இடத்தில்ருப்பவரகளுக்குமே தேவைப்படுவது ஒரு முடிவு.
நமக்கு இந்த பூமிதான் Bad place.., போட்டி, பொறாமை, வஞ்சகம், நு எத்தனையோ நடுவில் ஒரளவு சுய நினைவுடன் வாழப் போராடுகிறோம். இங்கு மனிதர்களுக்கு மரண பயம் வருவது இயலபான ஒன்றுதான்.
மரணத்தை தவிர்க்க முடியாது. மரண பயத்தை போக்குவதற்கு வேண்டுமானால் இரண்டு வழிகள் இருக்கிறது- ஒன்று, மரணத்தை கட்டித் தழுவிக் கொள்ளுங்கள், இரண்டு- ‘ நீங்க நல்லா இருக்கனும் நு நினைப்பாங்கள, அது உங்கள நிச்சயமா வாழ வைக்கும்னு நம்புங்க..’
- ரோகிணி.
Also Read: சாகாவரம் in “THE GOOD PLACE”!
nalla eluthiruka. Good to read.
ReplyDeleteமரணம் இல்லாமல் இருப்பது thaan கொடியது 👁️
ReplyDelete