சாகாவரம் in “THE GOOD PLACE”!

 

THE GOOD PLACE’ என்பது சொர்க்கத்தை குறிப்பிடுகிறது.

 நல்லவர்கள் எல்லாம் சொர்க்கத்திற்கும் ,தீயவர்கள் எல்லாம் நரகத்திற்கும் செல்வார்கள் என்பது உண்மையா இல்லையா  தெரியாது,ஆனாலும் நாம் நம்புகிறோம்.

மார்கழி மாதம் சொர்க்கவாசல் திறக்கப்படும் நாளன்று,எவர்களின் உயிர் இம்மன்னைவிட்டு பிரிகிறதோ,அவ்வுயிர்கள் எல்லாம் சொர்க்கத்திற்குத்தான் செல்கிறது என்பது மற்றொரு நம்பிக்கை.

சரி,நாம் இறந்தபின்பு நரகத்திற்கு கொண்டுசெல்லப்படுகிறோம் என்றால்,அங்கு நாம் செய்த பாவங்களுக்கு ஏற்றவாறு,  நம்மை எண்ணெய் சட்டியில் வதட்டுவதோ, நம் தலையை பந்தாடுவதோ, நம் மீது பூச்சிகளை வீசுப்படுவதோ,எதுவாக இருப்பினும் அனுபவிப்போம்.

அதுவே, நாம் இறந்தபின்பு சொர்க்கத்திற்குச் சென்று விட்டால்,எந்தவித தண்டனைகளும் இருக்காது,  நமக்கு வேண்டியதெல்லாம் கிடைக்கும்,நாமும் விருப்பத்திற்கு ஏற்றவாரு  மகிழ்ச்சியாக இருப்போம்.

இது கிட்டத்தட்ட  நாம் கேட்கும் வரம் போல தான். அதாவது நாம் சாமியிடம் ‘அது வேண்டும் இது வேண்டும்’ என்றுதானே வேண்டுகிறோம்.அதுவெல்லாம் நமக்கு சொர்க்கத்தில் கிடைக்கும்.

சரி, நமக்கு வேண்டியதெல்லாம் முடிவே இல்லாமல் கிடைத்துக்கொண்டே இருந்தால்,  அதற்கு அடுத்தது? ஒரு முடிவே இல்லாமல் சொர்க்கத்தில் எத்தனை நாட்கள் இருக்கமுடியும்?

ஒரு பாடல் நினைவுக்கு வருகிறது.”உத்தமவில்லன்” படத்தில் வரும்,

சாகாவரம் போல் சோகம் உண்டோ

கேளாய் மன்னா!!
தீராக் கதையை கேட்பார் உண்டோ

கேளாய் மன்னா!!

 என்ற பாடல்.

இந்த வரிகள் போலத்தான், நாம் சொர்க்கத்திலேயே இருந்தாலும் சரி, எப்போது இது ஒரு முடிவுக்கு வரும்? இதையெல்லாம் விட்டு  நிறந்திற ஓய்வு நிலைக்கு எப்போது செல்வோம்? என்ற எண்ணம் தோன்றும். இது பூமியில் இருக்கும்போதும் தோன்றும் தான்.

ஆங்கிலத்தில் ‘THE GOOD PLACE’ என்ற நாடகம் உள்ளது.சொர்க்கம் மற்றும் நரகத்தைச் சுற்றி அந்த நாடகம் நடக்கும். இறுதியில் இதேபோல் சொர்க்கத்திற்கு வந்தடைந்தவர்களுக்கு,எல்லாம் கிடைத்தும் நிம்மதியில்லாமல் இருப்பார்கள். 

அப்போது THE GOOD PLACE ன் COMMITTEE, ஒரு கதவு ஒன்று உருவாக்குவார்கள். அங்குள்ள மக்கள்,எப்போது வாழ்ந்தது போதும்,இனி  நிறந்திற மாக ஓய்வு எடுப்போம் என்று நிலைக்கு வருகிறார்களோ,அப்போது அந்த கதவுக்குள் நுழைவார்கள், நிறந்திற ஓய்வு கிடைக்கும். 

அந்த கதவுக்குப்பின் என்ன நடக்கும் என்பது தெரியாது.ஆனால், அந்த கதவை உருவாக்கியப்பின்தான் சொர்க்கத்தில் இருப்பவர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள்,பின் வாழ்ந்தது போதும் என்கிற பொழுது கதவினுள் நுழைவார்கள்.

அதுபோலத்தான் ,எந்த விஷயத்திலும் ஒரு முடிவு அல்லது எல்லை இருப்பதால்தான், நமக்கு சுவாரஸ்யமாக இருக்கிறது.

இந்த பூமி  தான் நமக்கு ”THE GOOD PLACE”, “இறப்பு”தான் எல்லை,அதனால்தான் தினமும் எதையோ தேடித்தேடி ஓடுகிறோம். பூமியில் இறப்பவர்கள்தான் வரம் வாங்கியவர்கள்.அதனால்தான் அவர்களை வணங்குகிறோம்.

 இறந்தபின்  நாம் சொர்க்கத்திற்குச் செல்கிறோமா அல்லது நரகத்திற்குச் செல்கிறோமா என்பது முக்கியமில்லை.  நாம் எல்லோரும் ஒரு நாள் இறக்கத்தான் போகிறோம்.

நாம் இறந்தபின்பு,எந்த நல்ல  நினைவுகளை,எந்த நல்ல பண்புகளை மற்றவர்களுக்கு விட்டுச் செல்கிறோம் என்பதுதான் முக்கியம்.

-ரோகிணி


Also Read: மரணபயம் in ‘The Bad Place’

Comments

Post a Comment

Popular posts from this blog

மரணபயம் in ‘The Bad Place’

J.Krishnamurti to Himself- Part 2

J.Krishnamurti to Himself - Part 1