Posts

Showing posts with the label happylife

அன்பே சிவம் VS THEISM !

Image
 ( DISCLAIMER: என் அனுபவத்தில் தெரிந்ததை எழுதியிருக்கிறேன்,யார் மனதையும் புன்படுத்தினால்,உங்கள் நம்பிக்கையை, நீங்களாக கைவிட்டால் மட்டுமே போகுமே தவிற,மற்றவர் சொல்வதனால் நம்பிக்கை போய்விடாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.) நம்பிக்கை என்று எல்லோருக்கும் உண்டு.பொதுவாக கடவுள் மேல் வைக்கப்படும் நம்பிக்கை மட்டும் தான் நம்பிக்கையாக பார்க்கப் படுகிறது. கடவுள் நம்பிக்கை உடையவர்களை DEISTS   என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். இவர்கள் தனக்கு பிடித்த ஒரு கடவுளை தேர்ந்தெடுத்து,அந்தக் கடவுள் மேல் நம்பிக்கை வைத்து வாழ்க்கையை நடத்துவார்கள். கடவுள் என்று எதுவும் இல்லை என்பவர்களை நம்பிக்கை என்றே ஒன்றும் இல்லாதவர்களாக பார்க்கப்படுகிறது. கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களை  ATHEISTS  என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள்.இவர்களுக்கும் நம்பிக்கை உண்டு,அறிவியலை நம்புவார்கள். இவர்கள் கடவுளை நம்புகிறவர்களை ,மூட நம்பிக்கை உள்ளவர்கள் என்று சொல்வது உண்டு. ATHEISTS இல்,   சிலர் அறிவியல் நன்கு அறிந்தவர்களாக இருப்பார்கள்,சிலருக்கு கடவுள் நம்புவதற்கு ஆதாரம் இருக்காததால் நம்பிக்கை இல்லாதவர்களாக இருப்பார்கள்...

சாகாவரம் in “THE GOOD PLACE”!

Image
  ’ THE GOOD PLACE ’ என்பது சொர்க்கத்தை குறிப்பிடுகிறது.   நல்லவர்கள் எல்லாம் சொர்க்கத்திற்கும் ,தீயவர்கள் எல்லாம் நரகத்திற்கும் செல்வார்கள் என்பது உண்மையா இல்லையா   தெரியாது,ஆனாலும் நாம் நம்புகிறோம். மார்கழி மாதம் சொர்க்கவாசல் திறக்கப்படும் நாளன்று,எவர்களின் உயிர் இம்மன்னைவிட்டு பிரிகிறதோ,அவ்வுயிர்கள் எல்லாம் சொர்க்கத்திற்குத்தான் செல்கிறது என்பது மற்றொரு நம்பிக்கை. சரி,நாம் இறந்தபின்பு நரகத்திற்கு கொண்டுசெல்லப்படுகிறோம் என்றால்,அங்கு நாம் செய்த பாவங்களுக்கு ஏற்றவாறு,   நம்மை எண்ணெய் சட்டியில் வதட்டுவதோ, நம் தலையை பந்தாடுவதோ, நம் மீது பூச்சிகளை வீசுப்படுவதோ,எதுவாக இருப்பினும் அனுபவிப்போம். அதுவே, நாம் இறந்தபின்பு சொர்க்கத்திற்குச் சென்று விட்டால்,எந்தவித தண்டனைகளும் இருக்காது,   நமக்கு வேண்டியதெல்லாம் கிடைக்கும்,நாமும் விருப்பத்திற்கு ஏற்றவாரு   மகிழ்ச்சியாக இருப்போம். இது கிட்டத்தட்ட   நாம் கேட்கும் வரம் போல தான். அதாவது நாம் சாமியிடம் ‘அது வேண்டும் இது வேண்டும்’ என்றுதானே வேண்டுகிறோம்.அதுவெல்லாம் நமக்கு சொர்க்கத்தில் கிடைக்கும். சரி, நமக்கு ...