HAPPY INTERNATIONAL MEN'S DAY- ’மாறா’வைப் போற்றுவோம்!

 

படம் :சூரரைப் போற்று.

“எனக்கு சமைக்க வீட்டுவேலைலாம் அத்துப்புடி தான்,ஆனா செய்யமாட்டேன்,எனக்கு என் பேக்கரி business தான் முக்கியம்”

இப்படி நிஜவாழ்க்கையில் சொல்லும் பெண்களுக்கு ’திமிர் பிடித்தவள்’ என்னும் பெயர் உண்டு.தனக்கு வேண்டியதை தேர்ந்தெடுக்கும் சுதந்திரம்  இன்னும் பெண்களிடம் கொடுக்கவில்லை,காரணம் பெண்கள் தவறாகத்தான் தேர்ந்தெடுப்பார்கள்  என்ற எண்ணம். 

காலம் காலமாக தமிழ் சினிமாவிலும், உழைப்பாளி முதல் Mr.local ,ஆண் தேவதை படம் வரை ,வீட்டு வேலைகளைத் தவிர தனக்கு பிடித்த வேலைகளில் ஈடுபாடு உள்ள பெண்களை வில்லிகளாகத்தான் சித்திரைக்கப்பட்டுள்ளார்கள்.

இப்படி வந்த படங்களையெல்லாம் hit  ஆக்கிவிட்டு,திடீரென்று பொம்மி யை மட்டும் போற்றுவது,பொம்மியை பொம்மயாக பார்த்ததால் தானோ ?


படம் :சூரரைப் போற்று.


இங்க எல்லாரும் புரிஞ்சிக்க வேண்டியது மாறா கதாப்பாத்திரத்தை தான்.பொம்மி யின் கனவுக்கும், அவளோட வாழ்க்கைக்கும் மதிப்பு கொடுத்து அதுக்கான space கொடுத்த மாறா தான் ஷ்பெசல். 

பொம்மி போன்ற பெண்கள் ஏராளமாக உள்ளார்கள்,’மாறா’ போன்ற ஆண் கணவராக கிடைக்காததால் அமைதியாக இருக்கிறார்களே தவிர ,எல்லா பெண்களும் கிட்டத்தட்ட பொம்மி யாகத்தான் வாழ நினைக்கிறார்கள்.

உண்மையில் பொம்மியைப் போல் இருக்கும் பெண்கள் அதிகம்.மாறா வை போன்ற ஆண்கள் தான் குறைவு.

மாறா’வைப் போற்றுவோம்!

அனைத்து ’மாறா’வுக்கும்  HAPPY INTERNATIONAL MEN'S DAY :)


- ரோகிணி

Comments

Post a Comment

Popular posts from this blog

மரணபயம் in ‘The Bad Place’

J.Krishnamurti to Himself- Part 2

வழக்கு எண் :10/10