Posts

Showing posts with the label feminism

சத்தாரு எனும் மாதொருபாகன்!

Image
  படம்: தங்கம் (பாவக்கதைகள்) இயக்குனர்: சுதா கொங்கரா. சில கதைகளும் சில கதாபாத்திரங்களின் நடிப்பும் நம்மை நிகழ்காலத்தை மறக்கச் செய்து,அப்படியே கதை களத்துக்கு எடுத்துச் செல்வது ஒரு சில படங்களால் தான் முடிகிறது.இதற்கு காரணம், அந்த கதாப்பாத்திரத்திற்கு ஏற்படும் வலி,மகிழ்ச்சி,துக்கம் எல்லாம் நமக்கு புரிவதால்தான்.  இருப்பினும் ஒரு சில கதாப்பாத்திரத்தில் என்ன அழுது புரண்டாலும் நமக்கு நடிப்பு மட்டுமே தெரியுமே தவிர,அந்த கதாப்பாத்திரத்தின் வலி புரியாமல்,வெரும் நடிப்புக்கு மட்டும் விருது வாங்கிவிடும்.  உதாரணத்துக்கு ,இந்தியில் வெளிவந்த, சல்மான் நடித்த படத்தில்  அவர் அழுவதுபோல்  ஒரு காட்சி ,அந்த காட்சியை பார்த்து ,திரையரங்கில் அத்தனை பேரும் சிரித்தார்கள்,காரணம் அவர் நடிப்பதுதான் தெரிந்தது தவிற,அந்த கதாப்பாத்திரத்தை உணர வைக்கத் தவறி விட்டார்.இதேபோல், சத்தாரின் கதாப்பாத்திரமும், நடிப்பை மட்டும் காட்டிவிட்டு, அந்த கதாப்பாத்திரத்தின் வலி வேதனைகளை புரிய வைக்கத் தவற விட்டுவிட்டது. கதைப் பற்றி:                ...

HAPPY INTERNATIONAL MEN'S DAY- ’மாறா’வைப் போற்றுவோம்!

Image
  படம் :சூரரைப் போற்று. “எனக்கு சமைக்க வீட்டுவேலைலாம் அத்துப்புடி தான்,ஆனா செய்யமாட்டேன்,எனக்கு என் பேக்கரி business தான் முக்கியம்” இப்படி நிஜவாழ்க்கையில் சொல்லும் பெண்களுக்கு ’திமிர் பிடித்தவள்’ என்னும் பெயர் உண்டு.தனக்கு வேண்டியதை தேர்ந்தெடுக்கும் சுதந்திரம்   இன்னும் பெண்களிடம் கொடுக்கவில்லை,காரணம் பெண்கள் தவறாகத்தான் தேர்ந்தெடுப்பார்கள்   என்ற  எண்ணம்.  காலம் காலமாக தமிழ் சினிமாவிலும், உழைப்பாளி முதல் Mr.local ,ஆண் தேவதை படம் வரை ,வீட்டு வேலைகளைத் தவிர தனக்கு பிடித்த வேலைகளில் ஈடுபாடு உள்ள பெண்களை வில்லிகளாகத்தான் சித்திரைக்கப்பட்டுள்ளார்கள். இப்படி வந்த படங்களையெல்லாம் hit   ஆக்கிவிட்டு,திடீரென்று பொம்மி யை மட்டும் போற்றுவது,பொம்மியை பொம்மயாக பார்த்ததால் தானோ ? படம் :சூரரைப் போற்று. இங்க எல்லாரும் புரிஞ்சிக்க வேண்டியது மாறா கதாப்பாத்திரத்தை தான்.பொம்மி யின் கனவுக்கும், அவளோட வாழ்க்கைக்கும் மதிப்பு கொடுத்து அதுக்கான space கொடுத்த மாறா தான் ஷ்பெசல்.  பொம்மி போன்ற பெண்கள் ஏராளமாக உள்ளார்கள்,’மாறா’ போன்ற ஆண் கணவராக கிடைக்காததால் அமைதியாக இருக்கிறார...