Posts

மரணபயம் in ‘The Bad Place’

Image
                                      பல்லகவுண்டன்பாளையம்-  எங்கள் ஊரில் மாரியம்மன் கோயில் ஒன்று உள்ளது. அந்த கோயிலுக்கு மார்கழி மாதம் ஆண்டுவிழா நடத்துப்படும். கிராமத்துக் கோயில் என்பதால் பண்டாரம் தான் பூஜை பராமறிப்பு எல்லாம். ஆண்டுவிழா அன்று மட்டும் சென்னிமலை முருகன் கோயிலில் இருந்து ஐயமார்கள் வந்து மந்திரம் ஓதி அபிசேகம் செய்து கோயில் முழுவதும் பூக்களால் அழங்கரித்து அம்மனுக்கு சிறப்பான அழங்காரம் செய்வார்கள். கோயில் பிரமாண்டமாக இருக்கும். ஏழு எட்டு பட்டிகளில் இருந்து மக்கள் வருவார்கள். ஊருக்குள் வரும் ஒரே ஒரு அரசு பேருந்து அன்று மட்டும் வராது.   ஐயமார்களோடு சென்னிமலையில் இருந்து 20 பேரும் அம்மன் தரிசனம் காண வருவார்கள். இவர்கள் எல்லாம் சுப்பு’சாமி’ என்று ஒருவர் தன் தலைமையில் அழைத்து வருவார். அன்று இரவு அம்மன் அபிசேகம் மாலை இவரோட செலவு.  தீவிரமான முருகர் பக்தர். எவ்வளவு தீவிரம் என்றால் , அவர் வீட்டுக்கு பூட்டு கிடையாது. வீட்டின் பூஜை அறையில் எல்லா பணக்கட்டுகளும் ஒரு தட்டில் வ...

ஒரு கோப்பை தேநீர்-3

Image
'அன்பு' மட்டும் யார் மீதும் யாரும் வலுக்கட்டாயமாக வர வைக்கவே முடியாது...  இருந்தாலும் அதற்கு உண்டான தன்மையோடு எல்லோரிடமும் 'அன்பு' இருந்து கொண்டு தான் இருக்கிறது... ! - ரோகிணி. 

வழக்கு எண் :10/10

Image
  (A True Story) கடந்த 10ஆம் தேதி கோவை நீதிமன்றத்திற்கு அப்பாவுடன் சென்றிருந்தேன்.அப்பா வக்கீலுடன் உள்ளே சென்றுவிட்டார்.வழக்கறிஞர் கூடத்திற்கு எதிரே உள்ளே கட்டடத்தின் பின்புறத்தில் கதவுகள் மூடியிருந்ததால் அங்கே எல்லாரும் அமர்வதற்கு வசதியாக இருந்தது.ஒரு தூணில் சாய்ந்து headphones காதில் மாட்டிக் கொண்டு அமர்ந்திருந்தேன். சிறிது நேரம் கழித்து 2 வயதான பெண்கள் வந்து என் அருகில்அமர்ந்தார்கள். என் பக்கத்தில் அமர்ந்திருந்த பெண்ணிற்கு 50 வயதிருக்கும். இன்னொருவருக்கு 75 வயது இருக்கும்.அந்தப்பெண் கால் மேல் கால் போட்டு போட்டு இறக்கிக் கொண்டே இருந்தார்.அவ்வப்போது என் கால்மேல் அவர் கால் பட்டுக் குண்டே இருந்தது.நான் சில முறை தள்ளிப்பார்த்தேன்,பின்பு கால் மடக்கி அமர்ந்து கொண்டேன்.   கொஞ்ச நேரம் கழித்து , பாட்டி என்னிடம் “ பணம் வாங்கிறக்கு வந்தோம் ,bank book மறந்திட்டு வந்திட்டோம் , பையன் எடுக்க போயிருக்கன், வேற ஏதாச்சு மறந்திட்டனா னு கேக்கனும், ஒரு போன் பன்னித் தரீங்களா இந்த number கு ” என்றார்.அந்த number கு போன் செய்து கொடுத்தேன்.   “ மருமகள் book எடுத்துட்டு அ...

தலை கீழ் !

Image
  2019 தை மாதம், பல்லகவுண்டன் பாளையம் கிராமத்தில்   ஜல்லிக்கட்டு நடை பெறுவதற்கு எல்லாம் தயாராக இருந்தது. ஒரு காட்டில் ஜல்லிக்கட்டிற்கு ஏற்றவாறு விளையாட்டுக் களமும் ,பார்வயாளர்களுக்கு பாதுகாப்பாகவும் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தது. சுத்தியுள்ள 12 பட்டியில் இருந்து,காலை களை அடக்கி பரிசுகளை வாங்கிச் செல்ல ஆண்களும், தான் வளர்த்த காளைகளை அழைத்துக் கொண்டு சில பெண்களும் ஆண்களும் குடும்பமாக வந்திருந்தனர். வாடிவாசலில் இருந்து சில தூரத்திற்கு தடுப்பு வைக்கப்பட்டு,வரிசையாக   ஒன்றன் பின் ஒன்றாக சுமார் 40 காளைகள் நின்று கொண்டு இருந்தது. முதல் காளை விடும் மரியாதை, ஊர் தலைவருக்கு கொடுக்கப்பட்டது.அவரது காளை “கருப்பன்” ,வெள்ளை நிறத்தோல், தேங்காய் சீவும் கத்தி போல் கூர்மையான கொம்பு இருக்கும். கொம்பு,மதில் ,கால்களில் மஞ்சள் பூசப்பட்டிருந்ததால் ஆள் பார்க்க சாதாரணமாக தெரிந்தாலும், சூடான மூச்சை சாதாரணமாக விட்டுக் கொண்டு எல்லாரையும் மோதுவதற்கு ,முட்ட கண்ணோடு கோவமாக பார்த்துக் கொண்டு காத்திருந்தான். கருப்பன் களத்துக்குள் இறக்கப் பட்டான். “ நம்ம ஊர் தலைவரின் காளை கருப்பன்… ய்ப்பா..என...

ஒரு கோப்பை தேநீர்-2

Image
2020 லிருந்து பிடித்துக் கொண்டது இந்த கு'டீ' பழக்கம்!  -ரோகிணி

ஒரு கோப்பை தேநீர் -1

Image
என் உடைந்த ஒற்றைக் கண்ணாடியை வைத்து, தேடுகிறேன் .., என் ஒற்றைக் கோப்பை தேநீரை மட்டுமல்ல, என் வாழ்க்கைக் கோட்டையும் கூட.., -ரோகிணி.

Freedom of Expression-Psychological Aspect!

Image
Being expressive is the only form of good living.This is what make us express our needs.This is the justice we should do to our soul. We should give ourselves the freedom to express first,this will help us identify who we are,what our needs are. When we don’t give ourselves the freedom to express , we will not know our true self. Without knowing one’s self, we can't satisfy us. Nothing will be enough.Life would always feel empty or half naked. What have we done to us?  We have created a system(Birth,School,College,Job,Marriage,children,Taking care of children,Oldage,Retirement,Death), nomatter how broad or openly we think,we tend to go back and live in the system. There are also certain rules and principles in this system like you should be strict with the children inorder for them to win in life, you should marry only once,Men must earn,women must give birth etc. More than this structure of lifestyle, this system has also successfully created an impact in ou...