வழக்கு எண் :10/10

 

(A True Story)


கடந்த 10ஆம் தேதி கோவை நீதிமன்றத்திற்கு அப்பாவுடன் சென்றிருந்தேன்.அப்பா வக்கீலுடன் உள்ளே சென்றுவிட்டார்.வழக்கறிஞர் கூடத்திற்கு எதிரே உள்ளே கட்டடத்தின் பின்புறத்தில் கதவுகள் மூடியிருந்ததால் அங்கே எல்லாரும் அமர்வதற்கு வசதியாக இருந்தது.ஒரு தூணில் சாய்ந்து headphones காதில் மாட்டிக் கொண்டு அமர்ந்திருந்தேன்.

சிறிது நேரம் கழித்து 2 வயதான பெண்கள் வந்து என் அருகில்அமர்ந்தார்கள். என் பக்கத்தில் அமர்ந்திருந்த பெண்ணிற்கு 50 வயதிருக்கும். இன்னொருவருக்கு 75 வயது இருக்கும்.அந்தப்பெண் கால் மேல் கால் போட்டு போட்டு இறக்கிக் கொண்டே இருந்தார்.அவ்வப்போது என் கால்மேல் அவர் கால் பட்டுக் குண்டே இருந்தது.நான் சில முறை தள்ளிப்பார்த்தேன்,பின்பு கால் மடக்கி அமர்ந்து கொண்டேன்.

 

கொஞ்ச நேரம் கழித்து , பாட்டி என்னிடம் “ பணம் வாங்கிறக்கு வந்தோம் ,bank book மறந்திட்டு வந்திட்டோம் , பையன் எடுக்க போயிருக்கன், வேற ஏதாச்சு மறந்திட்டனா னு கேக்கனும், ஒரு போன் பன்னித் தரீங்களா இந்த number கு என்றார்.அந்த number கு போன் செய்து கொடுத்தேன்.

 

மருமகள் book எடுத்துட்டு அன்னூர் ல இருந்து வரா.. 2 மணி ஆயிடும் “

நீங்க அன்னூர் ங்களா?”

ஆமா சாமிஅன்னூர் தாண்டி 5 கிமீ போகனும், நீ எந்த ஊர்.?”

ஈரோடு ங்க

என்ன பிரச்சனை யா வந்திருக்கீங்க?”

நிலத் தகராரு ங்க

இது எல்லார் ஊட்லயும் வந்திருது, எங்கூட பிறந்தவங்க 3 பேரு.. எல்லாருக்கு பொட்டப் புள்ளைங்கதான் இருக்கு,ஆனா நிலத்துக்கு வழி விடாம தகராருல இருக்கு, பேசலாம் னு பாத்தா ஏதாச்சு எலவு விழுந்துறுது

ஓ, நீங்களும் நிலத்தகராரு னு வந்தீங்களா?”

இல்ல சாமி, இங்க இருக்கால இவளால வாய் பேசமுடியாது,எல்லா புரிஞ்சுக்கவும் முடியாது , 2 வருஷத்துக்கு முன்னாடி இவள ஒரு “மாதாரிபையன் ‘அது பன்னிப்போட்டான், 40 வருக்ஷமா நானு இவளும் ஆடு மேக்க காட்டுக்கு போயிட்டு இருக்கோம்,காலை ல ஆட்டோட காட்டுக்குப் போனா,நான் வீட்டுக்கு போயி வேலை முடிச்சுட்டு வந்து இவளையும் ஆட்டையும் கூட்டிட்டு போவேன், அனைக்கு அனு பாத்து இப்படி ஆகிப்போச்சு

அந்தப் பாட்டியின் முகம் முழுக்க சோகம்.

 

இதை கேட்டவுடன் எனக்கு நெஞ்சில்  பாரமாக இருந்தது. வார்த்தை எதுவுமே வரவில்லை.

பரிதாபத்தை காட்டாமல் பேச முயற்ச்சித்தேன்.

Case போய்ட்டு இருக்குங்களா?.”

Case ஜெயிச்சுட்டோம்,போன மாசமே முடிஞ்சிருச்சி, பணம் வாங்கிக்க வர சொன்னாங்க,அதான் வந்தோம்

அவன் வந்து மன்னிப்பு கேட்டானுங்களா?”

இப்படி ஒரு கேவலமான கேள்வியை நான் கேட்டிருக்கக்கூடாது.

ஆள் வெச்சு மன்னிப்பு கேட்டான்,case வாபஸ் வாங்கிறதுக்கு

நான் case ல வேணாம், இவள வெச்சுட்டு என்னால court case னு சுத்தமுடியாது னு சொன்னேன்.என் மகன் தான் இதெல்லாம் விடக்கூடாது னு case போட்டான்.துடியலூர் police கார்ர்களும் சும்மா வடக்கூடாது,இந்த புள்ளைக்கு உதவினாங்க.

 

நான் அந்தப் பெண்ணின் முகத்தைப் பார்த்தேன். இதெல்லாம் தனக்கு நடந்ததா என்கிற கேள்வி கூட அவர் முகத்தில் தென்படவில்லை. அழகான குட்டி முகம், தன்னோட உலகத்தில் தான் ஆட்டுக்குட்டிகளோடு விளையாடிக் கொண்டிருப்பது போல இருந்தது.

 

போலிக்ஷ் காரங்க ,இவள hospital ல ஒரு நாள் தங்க சொன்னாங்க,இவ இருக்க மாட்டனு அழுது ஆர்ப்பாட்டம் பன்னி பயந்துட்டா..”

இவங்க உடம்புக்கு ஒன்னு இல்லங்கள?”

அதெல்லாம் ஒன்னுமில்லை…”

Case 2 வருக்ஷம் ஆயிடுச்சுங்களா?”

ஆமா சாமி, சாட்சி லாம் வந்து சொல்லனும் ல ..”

ஓ, சாட்சி இருக்குங்களா?”

ஆமா ,அப்பறம் Court ல judge கேட்டாரு ,இவ கை காமிச்சுட்டா “இவந்தான்னு ,அப்பறம் சாட்சி யும் சொன்னாங்க..case செயிச்சுட்டோம்.”

 நாங்கள் பேசுவதை கேட்டு , அவருக்கு trauma effect ஏதேனும் வருகிறதா என்பதை கவனிக்க அவரின் முகத்தைப் பார்த்தேன். எனக்கு ஒரு சிரிப்பை பதிலாகக் கொடுத்தார்.

 

 -ரோகிணி

(31/12/2022) 

Comments

Post a Comment

Popular posts from this blog

மரணபயம் in ‘The Bad Place’

J.Krishnamurti to Himself- Part 2