தலை கீழ் !
2019 தை மாதம்,
பல்லகவுண்டன் பாளையம் கிராமத்தில் ஜல்லிக்கட்டு
நடை பெறுவதற்கு எல்லாம் தயாராக இருந்தது. ஒரு காட்டில் ஜல்லிக்கட்டிற்கு ஏற்றவாறு விளையாட்டுக்
களமும் ,பார்வயாளர்களுக்கு பாதுகாப்பாகவும் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தது.
சுத்தியுள்ள
12 பட்டியில் இருந்து,காலை களை அடக்கி பரிசுகளை வாங்கிச் செல்ல ஆண்களும், தான் வளர்த்த
காளைகளை அழைத்துக் கொண்டு சில பெண்களும் ஆண்களும் குடும்பமாக வந்திருந்தனர்.
வாடிவாசலில்
இருந்து சில தூரத்திற்கு தடுப்பு வைக்கப்பட்டு,வரிசையாக ஒன்றன் பின் ஒன்றாக சுமார் 40 காளைகள் நின்று கொண்டு
இருந்தது.
முதல் காளை
விடும் மரியாதை, ஊர் தலைவருக்கு கொடுக்கப்பட்டது.அவரது காளை “கருப்பன்” ,வெள்ளை நிறத்தோல்,
தேங்காய் சீவும் கத்தி போல் கூர்மையான கொம்பு இருக்கும். கொம்பு,மதில் ,கால்களில் மஞ்சள்
பூசப்பட்டிருந்ததால் ஆள் பார்க்க சாதாரணமாக தெரிந்தாலும், சூடான மூச்சை சாதாரணமாக விட்டுக்
கொண்டு எல்லாரையும் மோதுவதற்கு ,முட்ட கண்ணோடு கோவமாக பார்த்துக் கொண்டு காத்திருந்தான்.
கருப்பன்
களத்துக்குள் இறக்கப் பட்டான்.
“ நம்ம ஊர்
தலைவரின் காளை கருப்பன்…
ய்ப்பா..என்னமா
சீரி வரான்.. கோவத்த பாருயா..”
அங்கே எல்லாரையும்
சீறிக் கொண்டு வந்த கருப்பன் , செம்மண்ணுக்கு
அவ்வளவு அழகாகவும் கம்பீரமாகவும் இருந்தான். அவனை கண்டதும் களத்தில் இருந்தவர்களில்
பாதி பேர் தடுப்பு கம்பியின் மேல் விரு விரு என்று ஏறிக் கொண்டனர்.
“ஏ எரங்கி
புடிங்கயா கருப்பன.. கருப்பன அடக்கினா “தங்க காசு “ பரிசு..”
எல்லோரும்
எறங்கி சுற்றி வந்தெல்லாம் கருப்பனை பிடிக்க முயன்றார்கள்.கருப்பனோ அவர்களை முட்டப்
போவது போல விளையாட்டாக மெரட்டி கொண்டிருந்தான். அப்போது ஒருவன் குறி வைத்து கிட்ட நெருங்கினான்,கருப்பனும்
கிட்ட நெருங்க , அருகில் செல்ல முடியாமல் அந்த வீரன் பயந்து போய் தரையில் படுத்துவிட்டான்.
“படுத்தே
விட்டானய்யா”
வீரர்கள்,பார்வையாளர்கள்
என எல்லோருக்கும் அதை பார்த்து ஒரே சிரிப்பு.
அடுத்து கருப்பனை
அடக்க இரண்டு பேர் ஒன்றாக சென்றனர்.
“இரண்டு பேர்
புடிச்சா பொங்கல் வாழ்த்துக்கள் தான் பரிசு”
கருப்பனை
யாராலும் கிட்டக்கூட நெருங்க முடியவில்லை. வீரர்கள் அமைதியாக தள்ளி நின்று கொண்டிருந்ததால்,
கருப்பன் நேராக வெளியே ஓடினான்.
“மாடு வென்று
விட்டது”
ஊர் தலைவருக்கு
தான் ஜெயித்தது போன்ற ஒரு உணர்வோடு மேடையில் நின்று கொண்டிருந்தார்.
கருப்பனை
பிடித்து தலைவரிடம் ஒப்படைக்க ஆட்கள் வரிசையாக ஒவ்வொரு கயிராக வீசி கொண்டு பின்னே ஒடினார்கள்.
“அங்கிட்டு
கதவ அடைங்கப்பா..அடுத்த காளை வருது”
கருப்பன்
வெளியே ஓடியதும் கதவு அடைக்கப்பட்டது.
அடுத்து ஒரு
பெண் வளர்த்த காளை களத்தில் இறக்கப்பட்டான்.
“அடுத்து
வரது வீராங்கனை வளர்த்த காளை..”
அந்தப் பெண்
,அத்தனை ஆண் வீரர்களுடன் வாடிவாசல் அருகிலேயே ஒரு துண்டை காற்றில் அசைத்துக் கொண்டு..”
வாடா ராசா..வாடா “ என்று கத்திக் கொண்டிருந்தால்.வாடிவாசல் திறந்ததும் ,”ராசா விளையாடிட்டு
வா” நு அந்தப் பெண் சற்று தள்ளி நின்று ராசா விலையாடுவதைப் பார்த்தால். ராசா கடும்
கோபத்தோடு சீறிக் கொண்டு எல்லாரையும் இடித்து விளையாடினான்.
” வீரர்களே
பாத்து, இவன் நல்லா இடிக்கிறான்யா..”
ஒரு சுற்று
சுற்றி வந்ததும் கருப்பன் சென்ற வழியே நோக்கி ஓடும்போது,தன் எஜமானியை பார்த்ததும் பக்கத்தில்
வந்து நின்று கொண்டான்.
“மாடு வென்று
விட்டது…அம்மா பரிசு வாங்கிட்டு போ”
பரிசை பெற்றுக்
கொண்டு“ ஜெயிச்சுட்டோம் டா ராசா “ நு தன் ராசாவிடம் பேசிக் கொண்டு வெளியே செல்லும்
வழி நோக்கி இருவரும் நடந்து சென்றனர்.
அடுத்து காளை
இறக்கப்பட்டான்.
“ காளை வருது
தயாரா இருங்கயா”
இவனை ஓரளவு வீரர்களால் கிட்ட நெருங்க முடிந்தது.எல்லோரும் அவன் மேல் ஏர முயன்றார்கள்.
“ஒருத்தர்
தான் புடிக்கனும்…கூட்டமா புடிச்சா செல்லாது”.
சுற்றி சுற்றி சீறிக் கொண்டிருந்த காளை யை ,ஒருவன்
குதித்து காளை யின் மதிலை பிடித்தான்.
“பிடியா பிடியா…10
வினாடி.. வேர யாரும் பிடிக்கக் கூடாது.”
அவனையும் இழுத்துக் கொண்டு , காளை குதித்து குதித்து
குழுக்கியது.அந்த வீரன் இருக்கமாக பிடித்துக் கொண்டான்.ஒரு கட்டத்தில் காளை நின்று
விட்டான். அந்த வீரனும் காளை யை பிடித்த வாறே உடன் நின்று விட்டான்.
“ ஜெயிச்சிட்டான்
யா… பரிசு வாங்கிக்க வாயா…”
காளையும்
வீரனும் ஒரு சேர நின்று கொண்டே இருந்தார்கள்.
“ யோ..மாட
விடுயா…”
அந்த வீரனுக்கு
மாட்டை விட்டால் முட்டி விடுமோ என்ற பயத்தில் அப்படியே மதிலை பிடித்தவாறே நின்று விட்டான்.
மாடும் நின்றுவிட்டது.
“இவன் என்னடா
விளையாட சொன்னா ரொமான்ச் பன்னிட்டு இருக்கான். போய் கூட்டியாங்க ய அவன”
அந்தக் காட்சியைப்
பார்த்து பார்வையாளர்களுக்கு ஒரே சிரிப்பு.
அவன் காளையை
ஒரு வழியாக கை விட்டதும்.. வெளியே செல்லும் வழி நோக்கி ஓடும்போது, முன்னே சென்றுகொண்டிருந்த
ராசா வை ப் பார்த்ததும் இடிக்கச் சென்றான். ராசா வின் எஜமானி,பின் வந்த காளை யை ஒரு
பார்வை பார்த்ததும், அந்தக் காளை பயந்து, ஒதுங்கி நேராக ஓடிவிட்டது.
அப்போது பார்வையாளர்கள் மத்தியில் ஒரு சலனம் ஏற்பட்டது.
முதல் வந்த கருப்பன் கயிறை அற்றுக் கொண்டு ஊர் மக்களோடு ஜல்லிக்கட்டு விளையாடிக்கொண்டிருந்தான்.
“அங்க தனியா
ஒரு ஜல்லிக்கட்டு நடக்குதுப்பா..”
எல்லோரும்
அங்கும் இங்கும் பாதுகாப்பான இடத்தை நோக்கி ஓடிக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு பெண்
தன் இரு குழுந்தைகோடு ஓடிக் கொண்டிருந்தால். ஆக்ரோஷமாக ஓடிக் கொண்டிருந்த கருப்பனின்
வழியில் ,அந்தப் பெண் தெரியாமல் ஓடினால். பின் கருப்பனை பார்த்தும் ,தன் குழந்தையை
சேலையில் மூடிக்கொண்டுக் கீழே உட்கார்ந்தால்.
கருப்பன் கிட்ட நெருங்கியதும் ,அங்க இருப்பது பெண் என்று தெரிந்ததும் ,பயந்து நிலை தடுமாறி அந்தப் பெண்ணை தாண்டிக் குதித்து நின்றுவிட்டான்.
அந்தப் பெண்
ஐ பார்த்து, “என்னை மன்னித்துவிடுங்கள்,என் வீரத்திற்கும் மேலான உங்கள் வீரத்தின் முன்
நான் அடி பனிகிறேன். நான் ஓடிவந்திருக்கக் கூடாது. எனக்கு நிகரான ஆண்கள் தான் எனது
இலக்கு. கண்முன் தெரியாமல் வந்துவிட்டேன்.” என்று பயந்து சொல்லிக் கொண்டிருக்கும் போதே,
கருப்பனை கயிற்றில் பிடித்துவிட்டனர்.
இந்தக் காட்சியைப்
ஒரு பத்திரைக்கையாளர் படம் பிடித்து,அடுத்த நாள் செய்தித் தாளில்..
“தாய் ,குழந்தைகளை
இடிக்காமல் தாண்டி சென்ற காளைக்கு பாராட்டு மழை..!”
“ பெண் ஐ
இடிக்காமல் சென்ற குழந்தை மனசு கொண்ட காளை!”
”..தாய் பாசத்துக்கு
அடி பனிந்த காளை!”
என்று எழுதப்பட்டிருந்த
செய்தியை காளை ‘ராசா’ விற்கு படித்துக் காட்டி , ராசா வும் தன் எஜமானியும் வாய் விட்டு சிரித்துக் கொண்டார்கள்.
-ரோகிணி.
Comments
Post a Comment