சத்தாரு எனும் மாதொருபாகன்!

 

படம்: தங்கம் (பாவக்கதைகள்)
இயக்குனர்: சுதா கொங்கரா.

சில கதைகளும் சில கதாபாத்திரங்களின் நடிப்பும் நம்மை நிகழ்காலத்தை மறக்கச் செய்து,அப்படியே கதை களத்துக்கு எடுத்துச் செல்வது ஒரு சில படங்களால் தான் முடிகிறது.இதற்கு காரணம், அந்த கதாப்பாத்திரத்திற்கு ஏற்படும் வலி,மகிழ்ச்சி,துக்கம் எல்லாம் நமக்கு புரிவதால்தான். 

இருப்பினும் ஒரு சில கதாப்பாத்திரத்தில் என்ன அழுது புரண்டாலும் நமக்கு நடிப்பு மட்டுமே தெரியுமே தவிர,அந்த கதாப்பாத்திரத்தின் வலி புரியாமல்,வெரும் நடிப்புக்கு மட்டும் விருது வாங்கிவிடும். 

உதாரணத்துக்கு ,இந்தியில் வெளிவந்த, சல்மான் நடித்த படத்தில் அவர் அழுவதுபோல் ஒரு காட்சி ,அந்த காட்சியை பார்த்து ,திரையரங்கில் அத்தனை பேரும் சிரித்தார்கள்,காரணம் அவர் நடிப்பதுதான் தெரிந்தது தவிற,அந்த கதாப்பாத்திரத்தை உணர வைக்கத் தவறி விட்டார்.இதேபோல், சத்தாரின் கதாப்பாத்திரமும், நடிப்பை மட்டும் காட்டிவிட்டு, அந்த கதாப்பாத்திரத்தின் வலி வேதனைகளை புரிய வைக்கத் தவற விட்டுவிட்டது.

கதைப் பற்றி:                                               

“மாதொருபாகன்” - பெருமாள் முருகன்.

முதலில் வரும்  அனிமேசனில் முழுவதும் சிவப்பு நிறத்தை வைத்து அடுத்து அடுத்து வயது  நிலைக்கு அது நகர்த்தி செல்லும்.இது முதலில் கோயில் கோபுரத்திலிருந்து உதயமாகி வரும் சூரியனில் தொடங்கும். 

இந்த சிவப்பு நிறம்  இறைவனோடு ஒப்பிடப்படுகிறது,அதாவது,மனிதப் பிறப்பினை இறைவனின் படைப்பாகக் குறிப்பிடுகிறது. அதிலே,அந்த பெண் ரயில் வண்டியில் வெளியூர் செல்லும் காட்சியில்,கையில் பெருமாள் முருகன் அவர்கள் எழுதிய “மாதொருபாகன்” புத்தகம் படிப்பது போல இருக்கும். 

அந்த புத்தகத்தின் அட்டையில் பாதி பெண்,பாதி ஆண் உடல் கொண்ட படம்(அர்த்தனாரீஸ்வரர்)  இருக்கும்.இந்த அனிமேசனிலேயே யார் பற்றிய கதை என்பது விளங்குகிறது.

                                     
கதாப்பாத்திரங்கள் அணிந்திருக்கும் உடையைப்பார்க்கும்போது,கதைக்களம் 70,80 களில் நடப்பது போல இருக்கிறது.பொதுவாக இதுவரை தமிழ் சினிமாவில் ,திரு நங்கை ,திரு நம்பி யாக பிறந்தால்,அவர்களை பெற்றோர்கள், வீட்டை விட்டு துறத்திவிடுவதுபோல் தான் பார்த்திருக்கிறோம். 

இந்த படத்தில், சத்தாரைத் துரத்தாமல்,அவரின் மேல் எல்லோரும் வெருப்பு காட்டியிருந்தாலும்,கிட்டத்தட்ட சத்தாரை அவர்கள் ஏற்றுக்கொண்டு இருந்தார்கள் போலத்தான் தெரிந்தது. 

காதலுக்கு உதவியதால்தான் ,சத்தாரின் மேல் எல்லோருக்கும் கோபம் வந்தது போல இருந்தது.இங்கு கோபம்,சத்தாரின் பிறப்பின் மேல் அல்லாமல்,காதலின் மேல் தான் போல இருந்தது.

                                   
அடுத்து கதாப்பாத்திரத்திற்கு வருவோம். சமுத்திரக்கனி ஐயா வின் ’அப்பா’ படத்தில் ஒரு காட்சி வரும்,தன் மகனை பேருந்தில் தொலைத்து விடுவார்,அந்த நாள் முழுவதும் தேடியும் மகன் கிடைக்காத சோகத்தில் வீட்டின் முன் அழுது கொண்டிருப்பார்.

அப்போது,ஒரு ஆட்டோ ஒன்று வரும், ஒரு திரு நங்கை ,அவர் குழந்தையை கொண்டு வந்து இறக்கி விடுவார். அந்த குழந்தை அப்பா வை நோக்கி ஓடிவந்து தொத்திக்கொள்ளும். திரு நங்கையைப் பார்த்து அழுதுகொண்டே கையெடுத்து கும்பிடுவார் சமுத்திரக்கனி. உடனே அந்த திரு நங்கை கை தூக்கி வாழ்த்திவிட்டுச் செல்வார்.

இதே அந்த காட்சியில் ஒரு திரு நங்கை யை நடிக்க வைக்காமல், ஒருவரை திரு நங்கை யாக நடிக்க வைத்திருந்தால், அந்த காட்சி வெறும் நடிப்பாக மட்டுமே இருந்திருக்குமே தவிற, இந்தளவுக்கு உணர்ச்சியைப் புரிய வைத்து ,காட்சி மனதில் பதிந்திருக்காது.

இதேதான் இந்த சத்தார் கதாப்பாத்திரமும், நமக்கு நடிப்பை மட்டும் காட்டிவிட்டு சென்றுவிட்டது தவிற,  திரு நங்கையின் உண்ர்ச்சியைப் புரிய வைக்கமுடியாமல் போய் விட்டது.உதாரணத்திற்கு, இந்த படத்தில் ஒரு காட்சி வரும், காதல் ஜோடியை வண்டியில் ஊருக்கு அனுப்பும்போது, தங்கம்,சத்தாருக்கு ஒரு hug கொடுப்பார்,அப்போது சத்தார்,” இதுவரை மனசார யாரும் என்னை கட்டிப்பிடித்ததில்லை” என்று சொல்லி அழுவார். 

இந்த வசனத்தை  சொல்லிய பின் தான் திரு நங்கைக்கு கொடுத்த உணர்வு வெளிப்பட்டதே தவிற, அங்கு திரு நங்கை தெரியவில்லை.இதே காட்சியில், உண்மையிலேயே ஒரு திரு நங்கை யை நடிக்க வைத்திருந்து,அவருக்கு தங்கம்  ஒரு hug கொடுத்திருந்தால்,எதுவும் பேசாமலேயே உணர்ச்சி தென்பட்டிருக்கும்.

என்ன இருந்தாலும், நம் நண்பன் திரு நங்கை யாக நடிக்கும்போது நாம் கொடுக்கும் hug  விட, உண்மையிலேயே ஒரு திரு நங்கைக்கு நண்பனாக ஒரு hug கொடுப்பதுக்கும் வித்தியாசமான உணர்வு இருக்குமல்லவா!

இந்தப்படத்தில் எல்லோருடைய நடிப்பும்,பேசும் தமிழ் மொழியும் மிகவும் அழகாக இருக்கிறது,இருப்பினும் சில இடங்களில் உணர்ச்சிகளை புரிய வைக்கத் தவறிவிட்டது.

இங்கு ஆண்கள் உயரத்திலும்,பெண்கள் ,திரு நங்கைகள், திரு நம்பிகள் எல்லாம் கீழேயும் வைக்கப்பட்டிருக்கிறார்கள்.அதனால் தான்,ஒரு ஆண் – பெண்ணாகவோ,திரு நங்கை யாகவோ நடிக்கும்போது,மிகவும் ஆச்சர்யமாக பார்க்கப்பட்டு பாராட்டப்படுகிறது. அவனுடைய பிறப்பை விட்டுக்கொடுத்து நடிப்பது பெரிய விஷயம் என்று பார்ப்பவர்கள் எண்ணிக் கொள்கிறார்கள்.

திரு நங்கைகளில் நடிகர்களும் இருக்கிறார்கள்,அவர்கள் நடித்த படங்களும் ஏராளமுள்ளது.

-ரோகிணி,

Comments

  1. Padika padika innum article neendute poga koodatha nu iruku.. Proud of u ronnn unnoda antha purithal ku😍

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

மரணபயம் in ‘The Bad Place’

BEING A TOMBOY!

அன்பே சிவம் VS THEISM !