BEING A TOMBOY!

(it was written last year August 2021!)



எனக்கு tomboy வார்த்தையில் உடன்பாடில்லை.உங்கள் புரிதலுக்காக பயன் படுத்த வேண்டிய சூழ்நிலை.

சமீபத்தில் வெளிவந்த ”திட்டம் இரண்டு” படம், இந்தப் பதிவினை எழுத வைத்திருக்கிறது. என் வாழ்க்கை அனுபவத்தோடு சேர்த்து இதில் பேசியிருக்கிறேன்.

                                                 

மனிதனின் உடல் வெளி உருப்பு வைத்துதான் திரு நங்கை,திரு நம்பி,பெண்,ஆண், என்று சொல்லப்பட வேண்டுமே தவிற, உடல் அசைவுகள், நடந்து கொள்ளும் விதம் என்று வைத்து பாலினத்தை குறிப்பிடக்கூடாது.அப்படி குறிப்பிடுவது தவறு.

நான் tomboy type  என்று சொல்லிக் கொள்வதில் எனக்கு உடன்பாடில்லை.  நான் எப்படி நடக்கிறேன் என்றெல்லாம் யாரும் எனது பள்ளி நாட்களில் நண்பர்கள் சொன்னதில்லை.இன்று வரை பள்ளி நண்பர்கள் இதை பற்றியெல்லாம் என்னிடம் பேசியதுமில்லை. எனது வீட்டிலும்  இன்று வரை ,எனது நடை,உடல் அசைவு பற்றியெல்லாம் யாரும் பேசியதில்லை.

நான் கிராமத்துப் பெண்,முது நிலை பட்டம் படிக்கும்பொழுதுதான்,எனது இடுப்பு வரை இருந்த முடியை சிறியதாக curls வெட்டினேன் . அதன்பின் தான் நான் jeans ,tshirt அணிந்து வெளியே செல்ல ஆரம்பித்ததே.இள நிலை பட்டப்படிப்பு  வறை chudithar மட்டும்தான். ஆடைக்கும் பாலினத்துக்கும் சம்பந்தமில்லை .


கல்லூரி படிக்கும்போது தான் நண்பர்கள் சொல்ல ஆரம்பித்தார்கள்.பொதுவாக நிக்கவைத்து ragging  போன்றெல்லாம் இருக்காது. அவ்வப்போது, Saree உடுத்தும்போது அல்லது புகைப்படம் எடுக்கும் பொழுதோ,”இப்பயாச்சும் பொண்ணு மாறி இறேன்”,” நமக்கு தான் பொண்ணு மாறி வராதே”,” உன்னால பொண்ணாவும் இருக்க முடியல ,பையனாவும் இருக்கமுடியல” என்று சிரித்துக் கொண்டே சொல்வார்கள். சில பெண் ஆசிரியர்களும் ”இனிக்கு என்ன பொண்ணு மாறி இருக்க“ என்றெல்லாம் சொல்லியிருக்கிறார்கள்.

 நிறம்,உருவம்,எடை,உயரத்தை வைத்து எப்படி bodyshaming செய்யப்படிகிறதோ,அதேபோலத்தான் ,ஒரு மனிதன் நடந்து கொள்ளும் விதம் வைத்து shaming செய்யப்படுகிறது. இன்னும் புரியும்படி சொல்லனும்னா,பொதுவாக ஆண்கள் அழுதாலோ,பயந்தாலோ ,”பொண்ணு மாறி அழாதே,பொட்டை மாறி பயப்படுறே”னு சொல்வார்களே அதுதான். அழுகை,பயம்,வெட்கம் இதெல்லாம் இருந்தால் பெண்,தைரியம் ,பலம் மட்டும்தான் ஆண் என்றெல்லாம் முன்னோர் காலத்தில் எவனோ  சொல்லி நல்லா (uruttu)உருட்டியிருக்கிறான்.Biologically மற்றும் psychologically பார்த்தால் இது தவறு.இதை shaming என்றும் சொல்லாமல், அவர்களின் குறைந்த அறிவுக் ”கூந்தலின்” காரணம் இவ்வாறு கேளி செய்கிறார்கள் என்று சொல்லலாம்.

 இள நிலை பட்டம் படிக்கும் பொழுது ,இவர்கள் செய்யும் கேளிகளால், என்னை எந்த ஆண்களுக்குமே பிடிக்காதோ என்றெல்லாம் வருத்தப்பட்டது உண்டு.காரணம் அதுவரை “என்னை பிடிக்கும்” என்று யாரும் சொன்னதில்லை.

முது நிலை பட்டப்படிப்புக்கு முன்பு,தமிழக அரசு retail management certificate course இலவசமாக  30 நாள் வகுப்பு எங்கள் கல்லூரியில் நடத்தியது. கோவையில் உள்ள எல்லா கல்லூரிகளும் சேர்த்து  சுமார் 60 பேர் வகுப்பில் கலந்து கொண்டோம். வகுப்பின் கடைசி நாள் ,இந்த வகுப்பில் உங்கள் நண்பனிடம் பிடித்த விஷயத்தை  முன் வந்து சொல்ல சொன்னார்கள். அப்போது ஒரு மாணவன்,வகுப்பின் முன் வந்து,” நான் ரோகிணி யிடம் பேசியதில்லை, அவளோட அந்த tomboy action அவகிட்ட ரொம்ப நல்லா இருக்கு, அதனால அவள பிடிக்கும் “என்று சொன்னான். வாழ்க்கையில் முதல் முறை , நான் நடந்து கொள்ளும் முறை பற்றி வருத்தப்பட அவசியமே இல்லை என்று உண்ர்ந்தேன். இதன் பின்புதான் பாலினம்,sexuality பற்றியெல்லாம் புரிய ஆரம்பித்தது. இதைப் பற்றிய புரிதல் எல்லோருக்குமே அவசியம்.

இனி படத்தை பற்றி பேசுவோம்…,

                                         

படம் பார்ப்பதற்கு முன்பு heist/thriller என்று நினைத்து தான் பார்த்தேன். படத்தின் கதை முன்பே தெரியாது. பொதுவாக படங்கள் எந்த genre என்று குறிப்பிடுவார்கள். LGBTQ+ என்று ஒரு genre இருக்கிறது. எனக்கு எப்போதுமே இப்படி தனித்து குறிப்பிடுவது பிடித்ததில்லை. காரணம், Straight Sexuality என்று ஒரு  genre இல்லை.இது மட்டும் தான் normal போன்ற பிம்பத்தை உருவாக்கியிருக்கிறது. இந்தப் படம் LGBTQ+ genre என்று குறிப்பிட்டிருந்தால்,கண்டிப்பாக இந்தளவு யாரும் பார்த்திருக்க வாய்ப்பு இல்லை.

ஒரு gay படும் துன்பத்தை ,வித்தியாசமாக thriller type ல் எடுத்து, எல்லோரையும் பார்க்க வைத்தது சாதாரண விஷயம் இல்லை. இன்னும் பெரிதாக எல்லோருக்கும் தெரியாத சில விஷயங்களை படம் காட்டியிருந்தாலும், ஒரு சில இடங்களில், சூர்யாவின் கணவன் கிஷோர் ,”gay வாக இருப்பதெல்லாம் ஒரு பிரச்சனை” என்று ஆருதலுக்காகக் கூட  ”பிரச்சனை ” என்கிற வார்த்தைகளால் குறிப்பிடாமல் இருந்திருக்கலாம்.

Gay என்பதால் ,சமுதாயத்தால் பாதிக்கப்பட்டக் காரணத்திற்காக, ஒரு பெண்ணை ஏமாற்றி காதல் செய்வதை/காதல் செய்ய வைப்பதை எப்போதும் எந்த காரணத்திற்காகவும் ஏற்றுக் கொள்ள முடியாது. தான் யார் என்கிற உண்மையை அர்ஜூன் கூறிய பின்பு, ” நீ அர்ஜூனா  மட்டும் தெரிஞ்சிருந்தாக் கூட உங்கூட நான் வாழ்ந்திருப்பேன்” என்று தன் விருப்பம் எது என்னவென்று ஆதிரா சொன்ன பின்பும்,மீண்டும் வற்புருத்துவதும் எந்த விதத்தில் நியாயம். பெண்கள் மீது ஈர்ப்புள்ள அர்ஜூனை பார்த்து “ உங்களை ஒரு ஆணை கல்யாணம் செய்து வாழுங்க”னு சொன்னா எப்படி இருக்கும்” என்று தான் கேட்கத் தோன்றியது. இங்கே, ஒரு பெண்ணின் மனதை வேதனை யடைய செய்து,இப்படியான சூழ் நிலைக்குள் தள்ளப்பட்டால்,எப்படியான முடிவையும் எடுக்க முடியவே முடியாது. ஒரு நபரை சமுதாயம் நிராகரிப்பதாலோ கஷ்டப்படுத்துவதாலோ எல்லாம் பரிதாபம் பட்டு காதலிக்க முடியாது,கூடாது.

ஒரு சில இடங்களில் பெண்களின் no விற்கு தான் மதிப்பில்லை,இங்கு அவளின் விருப்பமான Sexuality கும் மதிப்பில்லாமல் போய்விட்டது.அர்ஜூனிற்கு சமுதாயம் செய்த கொடுமைகளை,அப்படியே திருப்பி தன் சுய நலத்திற்காக, ஆதிரா விற்கு செய்தது போலத்தான் இருந்தது.

படத்தின் இறுதி காட்சியில், அர்ஜூனிடம் ஆதிரா தன் பதிலை சொல்ல போகும்போது, ஒரு voice over வரும்,

”அவங்க சேறனுமா வேண்டாமா னு அவங்க முடிவு பண்ணட்டும்” .

  இந்த voice over கான காரணம் என்னவென்று புரியவில்லை. ஏனென்றால், உண்மையிலேயே அவர்கள்தான் அதை முடிவு செய்யனும். சமுதாயத்தில் இருக்கும் இன்னொறு பெரிய பிரச்சினை இது, அடுத்தவரின் வாழ்க்கையை பற்றிய முடிவை மற்றவர் முடிவு செய்வது. அவரவர் வாழ்க்கை யை முடிவு செய்யும் உரிமை அவரவருக்குத்தான். இங்கு எதோ காமம் என்பது ஆண் –பெண் உறவில் மட்டும் தான் என்று நினைத்துக் கொண்டு , gay உறவுகளை தூய்மையான உறவு போன்று கருதப்பட்டு வருகிறது. normal ஆன விஷயமாக  காமம்  பார்க்கப்படும் வரை,sex education என்று தாளில் கூட எழுதமுடியாது. இதனால் நடக்கும் கொடுமைகளும் நடந்து கொண்டே தான் இருக்கும்.

இந்த படத்தில் வருவது போலவே, தான் ”யார்” என்பதை உணர்ந்தும் , மற்றவர்களுக்காக தன்னை மறைத்து  வாழ்ந்து கொண்டிருக்கும் நபர்கள் இங்கு ஏராளம். இதற்கு காரணம் இவர்களை பற்றிய புரிதல் இல்லாமல், அவர்களை கேளி செய்து, நாம் புறக்கணிப்பதுதான் காரணம். இவர்களின் இந்த நிலமைக்கு “நாம் எப்படி காரணமாக முடியும்?” என்று நீங்கள் நினைத்தால்,உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்,”உங்கள் நண்பர்களில் எத்தனை பேர் lgbtq+ இருக்கிறார்கள்?”.

ஆனால்,நம்மை சுற்றி நிறைய , ”அர்ஜூன்” கள் ”தீபாசூர்யா” வாக வாழ்ந்து கொண்டுதான் இருகிறார்கள் என்பதுதான் உண்மை.

காலங்கால மாக,oppressed community யின் வாழ்க்கை கஷ்டங்களை மட்டும் திறையிட்டு,பார்வையாளர்களை வருத்தப்பட வைப்பது தமிழ் சினிமா கையாலும் யுக்தி. இது தேவை தான்,ஆனால் இது மட்டும் போதாது. சமுதாயத்தால் நிராகரிக்கப்பட்டு ,கஷ்டத்திலும் பயத்திலும் வாடுபவர்களுக்கு ஒரு தைரியம் கொடுக்க வேண்டியதும் நம் கடமை. இந்தக் கடமையை மட்டும் சரியாக செய்திருக்கிறது இந்தப் படம்.

இந்தப் படத்தில், தீபா சூர்யா வை அர்ஜுனாக மாறுவதற்கு உதவிய அவளின் கணவன் தான் அந்த hope. அவரோடு மற்றவர்கள் செய்த உதவியால் ஒருவருக்கு வாழ்க்கையே கிடைத்திருக்கிறது. இவர்களின் இந்த செயல்,  இந்த உலத்தையும் சமுதாயத்தையும் என்னை பழிக்க விடாமல் தடுத்து விட்டது.

இனியாவது, இந்த உலகம் இதோடு அழிந்து போகட்டும் என்று யாரும் சொல்லாதவாறு சேர்ந்து வாழ முயற்சிப்போம். பிடித்த உடையை அணிந்து கொள்வோம்,பிடித்தவரை காதலிப்போம் (யாராக இருந்தாலும்-வயது,பாலினம் தேவையில்லை), பிடித்த வேலையை செய்வோம், அழுகத் தோன்றினால் அழுவோம் ,சிரிக்கத் தோன்றினால்  சிரிப்போம்…

இந்த உலகில் உள்ள எந்த விஷயத்திற்கும்(காதல்,உடை,வேலை,உண்ர்ச்சி…..) பாலினத்திற்கும் சுத்தமாக சம்பந்தமில்லை!

"Every Time Someone Steps Up And Says Who They Are, The World Becomes A Better, More Interesting Place. "

- captain Raymond Holt.

 (Black & Gay Captain From Brooklyn 99 Series)

நீங்கள் நீங்களாக இருங்கள்!

(Self acceptance is the only key to a happy life!)

 -   ரோகிணி.

Comments

Popular posts from this blog

மரணபயம் in ‘The Bad Place’

J.Krishnamurti to Himself- Part 2

வழக்கு எண் :10/10