Psychological view on "VIOLENCE"!

Disclaimer: I am a non- psychology student :) 


Violence - mental abuse- physical abuse,sexual abuse,verbal abuse. இதில் எதாவது ஒன்னு நடந்தாலும் ,பாதிப்பு எல்லாமே ஒன்னோடு ஒன்னு கலந்து இருக்கும். இதை இன்னும் gender wise பிரிக்கலாம்- இதற்கு patriarchy ஒரு காரணம்.

உதாரணத்திற்கு – ஒரு பெண் கு sexual abuse  நடந்தால், அவள் mental(மன நிலை) மற்றும் physical  ஆவும் பாதிக்கப்படுவாள்.இதேதான் ஆண்களுக்கும்.

Emotional suppression:

ஒரு  emotion ஓட extreme வெளிப்பாடுதான் VIOLENCE. கோபம் தான் VIOLENCE ஆ வெளிப்படும். இப்ப எப்படி பயம் வந்தா பதட்டம் வருதோ, சோகம் வந்தா அழுகை வருதோ,அதுபோல கோபத்தின் உச்சகட்ட வெளிப்பாடு VIOLENCE. ஏதாவது ஒரு emotions supress செய்யப்பட்டாலும் அது aggressive ஆ VIOLENCE ஆ வரகூடும்.

Emotional supression - from childhood எல்லா வயதிலும் emotional need  நு இருக்கும். இந்த Emotional need வருவது normal தான். Childhood ல வருகிற emotional need satisfy ஆகல அப்படினா, குழந்தை கு தெரிந்த முறையில் அழிகையாவோ அல்லது நச்சுறுத்தலாகவோ அது வெளிப்படுத்தும். அந்த வெளிப்பாடும் neglect செய்யப்பட்டால், emotions handle செய்யமுடியாமல் ஒரு coping mechanism ஐ உருவாகும் like fantasy world. தன் emotional need கிடைக்காது நு தெரிந்த பிறகு, அது வெளிப்படுறது தானாகவே நின்று மனசுக்குள்ளேயே suppress ஆக ஆரம்பிக்கும். அது ஒரு வயது வரை அமைதி யா இருக்கும். Adult life ku வந்த பிறகு, socialize ஆகனும் கிற concious வந்த பிறகு, ஒருவித பயம் உருவாகும்.அந்த பயத்தை ,தான்  handle செய்யமுடியாமல் ,அது தன் மேல் ஒரு கோபத்தை உருவாக்கும். அந்த கோவம் சுற்றி உள்ள எல்லா விஷயங்களிலும் , தன்னை விட பலம் குறைவாக கருதப்படுகிற வர்களின் மீதும் அந்த அதிகமாக  வெளிப்படும். அந்த கோபம் தான் abuse ஆ மாறும்.

 
Adult ல நடக்குற behaviour கு முக்கிய காரணம் childhood ல emotional neeed neglect செய்யப்பட்டதுதான்.


Violence அ விட ரொம்ப கொடூரமானது emotions handle செய்றதுதான்.

என்னை பொறுத்தவரை அதீத கோபம் அடையும் எல்லாருமே victim தான். கோபத்தை வைத்து யாரையும் judge செய்யக்கூடாது.

Patriarchy and violence:


நம் வாழ்க்கையில் அல்லது நம்மை சுற்றி Violence இல்லைங்கிறதனாலயோ , நாம Violence அ எதுவும் செய்யல அப்படிங்கிறதனாலயும்,  நாம  Violence கு துணை போகலனு ஆகிடாது. இதுக்கும் நமக்கும் எந்த தொடர்பும் இல்லைனு ஆகிடாது. 

 நாம் நினைக்கிற ஒரு விஷயம் “ சரியான காரணம் இருந்து, ஒருவர் தாக்கப்பட்டால்,அது சரி..அதுவே காரணம் இல்லாமல் தாக்கப்பட்டாலோ, அல்லது பலவீனமான ஒருவர் தாக்கப்பட்டாலோ அது தவறு. சரி மற்றும் தவறு அடிப்படை வைத்து நாம் Violence ஐ வாழ வைத்துக் கொண்டிருக்கிறோம் .(பலவீனத்தின் அளவு  gender, age வைத்து பார்க்கப்படும் – Patriarchy யின் படி ஆண்கள் பலசாலிகள் ,பெண்கள் ,திரு நங்கைகள், திரு நம்பிகள் எல்லோரும் பலவீனமுடையவர்கள்).

அதேபோல் Emotions gender wise பிரிக்கப்பட்டு கொடுக்கப்பட்டுள்ளது. Emotions – அழுகை, சிரிப்பு, கோபம், பயம். இதில் பயம், அழுகை  weak emotions ஆக பார்க்கப்பகிறது,அதனால்   weak gender ஆக கருதப்படும் பெண்கள் ,திரு நங்கைகளுக்கு எழுதப்பட்டிருக்கிறது. கோபம் strong emotion ஆக கருதப்படுகிறது,அதனால் ,இது strong gender  ஆக கருத்தப்படும் ஆண்களுக்கு எழுதப்பட்டிருக்கிறது. ”கோபம்” பெண்களுக்கு இருக்க்கூடாது,முக்கியமாக ஒரு குடும்பத்தில் பெண் எவ்வளவு இழிவாக நத்டதப்பட்டாலும் கோபம் அடையக்கூடாது என்பது  patriarchy rule. உதாரணத்திற்கு பெண் கோப்பட்டால் “என்ன ஆம்பள யாட்ட கோபம் வருது?” நு சொல்வார்கள்.

அதேபோல், ஆண்களுக்கு அழுகை, பயம் இருக்கக்கூடாது.உதாரணத்திற்கு ஒரு ஆண் அழுதால் “ பொம்பள புள்ள மாறி அழுகாத” நு சொல்வார்கள். அதுவே பயந்தால், “ பொட்டை போல பயப்படுறா” நு சொல்வார்கள். ஆகச் சிறந்த எடுத்துக்காட்டு ,ஒருவறை ”தைரியம் இல்லாதவர்” அல்லது “சும்மா திட்டுவதற்குமே”  “பொட்டை “ என்கிற வார்த்தை பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

முன்பு “சிரிப்பு” பெண்களுக்கு கிடையாது..காரணம்  பொது இடங்களில் பெண் சிரித்து ஆண்களை மயக்குகிறார்கள் ” நு பழி போடுவதற்கு  சிரிப்பு பயன்படுத்தப்பட்டது.பெண் உடல் sex object ஆக பார்க்கப்படுவதும் ஒரு காரணம்.

உதாரணத்திற்கு "பொம்பள சிரிச்சா போச்சு" என்ற பாடல் கூட இருக்கிறது.

 (Also pysochologically ,யாராவது நம்மிடம் பேசும்போது சிரித்த முகத்துடன்  பேசினால் ,அதிக ஆர்வம் அல்லது அன்பு உடையவர்களாக இருக்க்கூடும்.)

Patriarchy ஐ ஆண்கள் எவ்வளவுக்கு எவ்வளவு கொண்டாடுகிறார்களோ, அவ்வளவுக்கு அவ்வளவு அவர்களுக்கே பாதிப்பும் இருக்கிறது.படங்களும் ஆண்கள் தான் physically பலம் கிற பிம்பத்தை உருவாக்கி விட்டது.
இதை எல்லாம் ஆண்கள் கொண்டாடுவது அவர்களுக்குத்தான் ஆபத்து. இது domestic violence la மாட்டிக்கொள்ளும் போது தான் அதோட பிரச்சினையே புரியும்.


Eg: johnny depp vs amber Heard Defamation case.
எல்லாரும் திரும்பி பார்த்த case issue. காரணம் இந்த case இல் , ஒரு ஆண் தான் domestic violence victim.
Case trial போது, ஒரு கேள்வி johnny depp யிடம் கேட்கப்பட்டது,


Amber heard's attorney : " You are a lot bigger than amber right?? "
Johny Depp: I wouldn't say that.


இந்த கேள்வி உருவானதின் காரணமே, பெண்களை விட ஆண்கள் physically strong ன்கிற mindset தான்.இதுதான் உண்மை நு ஆண்களை யே நம்ப வைத்தது தான் பிரச்சினையே!


Celebrating VIOLENCE: 

Physical abuse ஐ normalize செய்ததில் சினிமா விற்கு மிகப்பெரிய பங்கு உண்டு.


சமீபத்தில் வெளிவந்த K.G.F   படத்தில் இரத்தக் காட்சிகள் ஏராளம். ஆனால் அந்த படத்தை எல்லோருக்கும் பிடிக்கக் காரணம் “Violence  mass ஆ காட்சிப் படுத்தப்பட்டு,அது மூலமா பலமுடையவனா காட்டிக் கொள்வதால், பார்ப்பவர்களுக்கு பலம் என்பது Violence தானு ஒரு எண்ணம் உருவாகிவிடுகிறது.


நம் தமிழ், தெலுகு , மலையாலம் ,ஹிந்தி, ஆங்கிலம் நு எல்லா மொழிகளிலுமே ஆண்களுக்கு Violence காட்சிகள் மூலம் 100 பேரை காற்றில் பறக்கவிட்ட்டு ”இதுதான் பலம்” னு நம்மை நம்ப வைத்ததுவிட்டார்கள். இதுதான் பலம்  என்று நினைத்து நாமும் அவர்களை அரசியலுக்கு வந்து எங்கள காப்பாத்துங்க னு வேற அழைக்கும் அளவுக்கு அறிவில்லாமல் போய்விடுகிறோம்.

இதேபோல் பெண் கதாப்பாத்திரங்களுக்கும் சண்டை காட்சிகள் கொடுக்கப்பட்டுள்ளது, wonderwomen, thor, avengers போன்ற படங்களில் சண்டை காட்சிகளை விட அதில் வெளித்தோற்றத்துக்காக மட்டும் தான் ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். 


இதற்கு காரணம், சண்டை காட்சிகளில் ஒருவித force இருந்தால்தான், பார்ப்பதற்கு mass , பலம் feel கொடுக்கும். பெண்களின் சண்டை காட்சிகளில் அது பெரியதாக இருக்காது. எனக்கு தெரிந்து killbill படத்தில் வரும் காட்சிகள் மட்டும் massfeel கொடுக்கும். 


”இப்படியெல்லாம் பார்த்தால் படமே பார்க்கமுடியாது?” நு ஒரு கேள்வி வரும்.

ஒரு படம் பார்ப்பதற்கும் கொண்டாடுவதற்குமான வித்தியாசம் தான் நாம் எதை பெரியதாய் நினைக்கிறோம் கிறத சொல்லும்.


அடுத்து abuse அ நகைச்சுவை ஆ காட்டுனதுல தமிழ் சினிமா வின் மூத்த ஆகச் சிறந்த கலைஞர்களுக்கும் பங்கு இருக்கு. இதில் ஆண்கள் பெண்களிடம் அடி வாங்குவதெல்லாம் நகைச்சுவை யாக சித்திரைக்கப்பட்டுள்ளது.

அதையும் நாம் ரசிச்சு சிரிக்கிறோமே, இது சரியா? 


நம்ம எல்லாருக்கு violence உள்ளயும் இருக்கு. அதுமட்டும் தான் பலம் னு நினைத்து அடக்குமுறை செய்து பயத்தை உருவாக்கி வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் எல்லோருமே மன நிலை பாதிக்கப்பட்டவர்கள்தான்.

மன நிலை பாதிக்கப்பட்டவர்கள்நு சொல்றத விட, we can say that
"we all are victims".

War doesn’t happen because we have  huge dangerous weapons. War happens because violence is still in our head. Imagine if we didn’t know anything about the existence of violence ,war wouldn’t be here.


-ரோகிணி.


Disclaimer: I am not justifying the ones who does any kind of violence, but I can say that it's definitely upto the one's self  to deal or adjust with the vulnerability of others.



Comments

Post a Comment

Popular posts from this blog

மரணபயம் in ‘The Bad Place’

J.Krishnamurti to Himself- Part 2

வழக்கு எண் :10/10