ஆழம்

 


(கடைசி வரிதான் தொடக்கம்….,)

எப்பொழுதும் போல ஒரு மதியம் என்று இல்லாமல்,இந்த மதியத்தை தாண்ட முடியவில்லை. அடுத்த நொடி ,அடுத்த நாள்,வாழ்க்கை அடுத்த கட்டம் என எதுவுமே இல்லாமல் இருந்துவிடவேண்டும்.

ஒரு அறை தென்படுகிறது.

எதாவது படிக்க பார்க்க எழுத முட்படுகிறேன்.

அந்த அறை பூட்டப் பட்டிருக்கிறது. திறப்பதற்கான சாவி என்னிடம் இல்லை. யாரும் திறக்க முற்படுவதாக தெரியவில்லை, நானே  கல்ல சாவி போட்டு திறந்தேன்.

Being in love by osho புத்தகம்  இருந்தது.  

பூட்டும் சாவியும் மறுபடியும் பூட்டிக் கொண்டது. இந்த முறை பெரிய கல் ஒன்றை எடுத்து பூட்டின் தலை மேல் போட்டுவிட்டேன். பூட்டு உடைந்தது.

சிறிது நேரம் நடந்தேன் பாட்டுடன்.வரிகள் காதில் கேட்க வில்லை. இசை மட்டும்  நன்றாக கேட்கிறது..

உடைந்த பூட்டு ,அறையின் கதவில் சிக்கியிருந்தது.கொஞ்சம் சிரமப்பட்டேன்.திறக்க முடியவில்லை.

இப்போது சரியான பாடல் தேடிக்கொண்டிருக்கிறேன்.

பாட்டு தேட நெட் உதவவில்லை. Downloads இல் 4 பாடல் இருந்தது. இந்த பாடல் எனக்கு பிடிக்கும் என்று என்னை நம்பவைத்துவிட்டேன்.

1 ½ பாடல் கேட்டுவிட்டேன்.

யோசிக்காமல்  auxa blade வைத்து பூட்டை அருத்துவிட்டேன்.

இனி அந்த அறையை பூட்ட முடியாது.

அந்த அறையில் எல்லாம் கலைந்து கிடந்தது.எல்லோரும் பார்த்து எதோ சொல்லிக் கொண்டே போகிறார்கள்.

அந்த பூட்டு ஓரமாக நின்று என்னை பாவமாக பார்த்துக் கொண்டிருக்கிறது.

நானும் அதை பாவமாக பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

-ரோகிணி

இப்போது ….எல்லாம் நினைவுக்கு வந்து உயிரிடம் கேட்கிறது. 

Comments

Post a Comment

Popular posts from this blog

மரணபயம் in ‘The Bad Place’

J.Krishnamurti to Himself- Part 2

வழக்கு எண் :10/10