அன்பே சிவம் VS THEISM !

( DISCLAIMER: என் அனுபவத்தில் தெரிந்ததை எழுதியிருக்கிறேன்,யார் மனதையும் புன்படுத்தினால்,உங்கள் நம்பிக்கையை, நீங்களாக கைவிட்டால் மட்டுமே போகுமே தவிற,மற்றவர் சொல்வதனால் நம்பிக்கை போய்விடாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.) நம்பிக்கை என்று எல்லோருக்கும் உண்டு.பொதுவாக கடவுள் மேல் வைக்கப்படும் நம்பிக்கை மட்டும் தான் நம்பிக்கையாக பார்க்கப் படுகிறது. கடவுள் நம்பிக்கை உடையவர்களை DEISTS என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். இவர்கள் தனக்கு பிடித்த ஒரு கடவுளை தேர்ந்தெடுத்து,அந்தக் கடவுள் மேல் நம்பிக்கை வைத்து வாழ்க்கையை நடத்துவார்கள். கடவுள் என்று எதுவும் இல்லை என்பவர்களை நம்பிக்கை என்றே ஒன்றும் இல்லாதவர்களாக பார்க்கப்படுகிறது. கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களை ATHEISTS என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள்.இவர்களுக்கும் நம்பிக்கை உண்டு,அறிவியலை நம்புவார்கள். இவர்கள் கடவுளை நம்புகிறவர்களை ,மூட நம்பிக்கை உள்ளவர்கள் என்று சொல்வது உண்டு. ATHEISTS இல், சிலர் அறிவியல் நன்கு அறிந்தவர்களாக இருப்பார்கள்,சிலருக்கு கடவுள் நம்புவதற்கு ஆதாரம் இருக்காததால் நம்பிக்கை இல்லாதவர்களாக இருப்பார்கள்...