மரணபயம் in ‘The Bad Place’
பல்லகவுண்டன்பாளையம்- எங்கள் ஊரில் மாரியம்மன் கோயில் ஒன்று உள்ளது. அந்த கோயிலுக்கு மார்கழி மாதம் ஆண்டுவிழா நடத்துப்படும். கிராமத்துக் கோயில் என்பதால் பண்டாரம் தான் பூஜை பராமறிப்பு எல்லாம். ஆண்டுவிழா அன்று மட்டும் சென்னிமலை முருகன் கோயிலில் இருந்து ஐயமார்கள் வந்து மந்திரம் ஓதி அபிசேகம் செய்து கோயில் முழுவதும் பூக்களால் அழங்கரித்து அம்மனுக்கு சிறப்பான அழங்காரம் செய்வார்கள். கோயில் பிரமாண்டமாக இருக்கும். ஏழு எட்டு பட்டிகளில் இருந்து மக்கள் வருவார்கள். ஊருக்குள் வரும் ஒரே ஒரு அரசு பேருந்து அன்று மட்டும் வராது. ஐயமார்களோடு சென்னிமலையில் இருந்து 20 பேரும் அம்மன் தரிசனம் காண வருவார்கள். இவர்கள் எல்லாம் சுப்பு’சாமி’ என்று ஒருவர் தன் தலைமையில் அழைத்து வருவார். அன்று இரவு அம்மன் அபிசேகம் மாலை இவரோட செலவு. தீவிரமான முருகர் பக்தர். எவ்வளவு தீவிரம் என்றால் , அவர் வீட்டுக்கு பூட்டு கிடையாது. வீட்டின் பூஜை அறையில் எல்லா பணக்கட்டுகளும் ஒரு தட்டில் வ...