Posts

Showing posts from December, 2022

வழக்கு எண் :10/10

Image
  (A True Story) கடந்த 10ஆம் தேதி கோவை நீதிமன்றத்திற்கு அப்பாவுடன் சென்றிருந்தேன்.அப்பா வக்கீலுடன் உள்ளே சென்றுவிட்டார்.வழக்கறிஞர் கூடத்திற்கு எதிரே உள்ளே கட்டடத்தின் பின்புறத்தில் கதவுகள் மூடியிருந்ததால் அங்கே எல்லாரும் அமர்வதற்கு வசதியாக இருந்தது.ஒரு தூணில் சாய்ந்து headphones காதில் மாட்டிக் கொண்டு அமர்ந்திருந்தேன். சிறிது நேரம் கழித்து 2 வயதான பெண்கள் வந்து என் அருகில்அமர்ந்தார்கள். என் பக்கத்தில் அமர்ந்திருந்த பெண்ணிற்கு 50 வயதிருக்கும். இன்னொருவருக்கு 75 வயது இருக்கும்.அந்தப்பெண் கால் மேல் கால் போட்டு போட்டு இறக்கிக் கொண்டே இருந்தார்.அவ்வப்போது என் கால்மேல் அவர் கால் பட்டுக் குண்டே இருந்தது.நான் சில முறை தள்ளிப்பார்த்தேன்,பின்பு கால் மடக்கி அமர்ந்து கொண்டேன்.   கொஞ்ச நேரம் கழித்து , பாட்டி என்னிடம் “ பணம் வாங்கிறக்கு வந்தோம் ,bank book மறந்திட்டு வந்திட்டோம் , பையன் எடுக்க போயிருக்கன், வேற ஏதாச்சு மறந்திட்டனா னு கேக்கனும், ஒரு போன் பன்னித் தரீங்களா இந்த number கு ” என்றார்.அந்த number கு போன் செய்து கொடுத்தேன்.   “ மருமகள் book எடுத்துட்டு அன்னூர் ல இருந்