தலை கீழ் !
2019 தை மாதம், பல்லகவுண்டன் பாளையம் கிராமத்தில் ஜல்லிக்கட்டு நடை பெறுவதற்கு எல்லாம் தயாராக இருந்தது. ஒரு காட்டில் ஜல்லிக்கட்டிற்கு ஏற்றவாறு விளையாட்டுக் களமும் ,பார்வயாளர்களுக்கு பாதுகாப்பாகவும் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தது. சுத்தியுள்ள 12 பட்டியில் இருந்து,காலை களை அடக்கி பரிசுகளை வாங்கிச் செல்ல ஆண்களும், தான் வளர்த்த காளைகளை அழைத்துக் கொண்டு சில பெண்களும் ஆண்களும் குடும்பமாக வந்திருந்தனர். வாடிவாசலில் இருந்து சில தூரத்திற்கு தடுப்பு வைக்கப்பட்டு,வரிசையாக ஒன்றன் பின் ஒன்றாக சுமார் 40 காளைகள் நின்று கொண்டு இருந்தது. முதல் காளை விடும் மரியாதை, ஊர் தலைவருக்கு கொடுக்கப்பட்டது.அவரது காளை “கருப்பன்” ,வெள்ளை நிறத்தோல், தேங்காய் சீவும் கத்தி போல் கூர்மையான கொம்பு இருக்கும். கொம்பு,மதில் ,கால்களில் மஞ்சள் பூசப்பட்டிருந்ததால் ஆள் பார்க்க சாதாரணமாக தெரிந்தாலும், சூடான மூச்சை சாதாரணமாக விட்டுக் கொண்டு எல்லாரையும் மோதுவதற்கு ,முட்ட கண்ணோடு கோவமாக பார்த்துக் கொண்டு காத்திருந்தான். கருப்பன் களத்துக்குள் இறக்கப் பட்டான். “ நம்ம ஊர் தலைவரின் காளை கருப்பன்… ய்ப்பா..என...