BEING A TOMBOY!
(it was written last year August 2021!) எனக்கு tomboy வார்த்தையில் உடன்பாடில்லை.உங்கள் புரிதலுக்காக பயன் படுத்த வேண்டிய சூழ்நிலை. சமீபத்தில் வெளிவந்த ”திட்டம் இரண்டு” படம், இந்தப் பதிவினை எழுத வைத்திருக்கிறது. என் வாழ்க்கை அனுபவத்தோடு சேர்த்து இதில் பேசியிருக்கிறேன். மனிதனின் உடல் வெளி உருப்பு வைத்துதான் திரு நங்கை,திரு நம்பி,பெண்,ஆண், என்று சொல்லப்பட வேண்டுமே தவிற, உடல் அசைவுகள், நடந்து கொள்ளும் விதம் என்று வைத்து பாலினத்தை குறிப்பிடக்கூடாது.அப்படி குறிப்பிடுவது தவறு. நான் tomboy type என்று சொல்லிக் கொள்வதில் எனக்கு உடன்பாடில்லை. நான் எப்படி நடக்கிறேன் என்றெல்லாம் யாரும் எனது பள்ளி நாட்களில் நண்பர்கள் சொன்னதில்லை.இன்று வரை பள்ளி நண்பர்கள் இதை பற்றியெல்லாம் என்னிடம் பேசியதுமில்லை. எனது வீட்டிலும் இன்று வரை ,எனது நடை,உடல் அசைவு பற்றியெல்லாம் யாரும் பேசியதில்லை. நான் கிராமத்துப் பெண்,முது...