சத்தாரு எனும் மாதொருபாகன்!
படம்: தங்கம் (பாவக்கதைகள்) இயக்குனர்: சுதா கொங்கரா. சில கதைகளும் சில கதாபாத்திரங்களின் நடிப்பும் நம்மை நிகழ்காலத்தை மறக்கச் செய்து,அப்படியே கதை களத்துக்கு எடுத்துச் செல்வது ஒரு சில படங்களால் தான் முடிகிறது.இதற்கு காரணம், அந்த கதாப்பாத்திரத்திற்கு ஏற்படும் வலி,மகிழ்ச்சி,துக்கம் எல்லாம் நமக்கு புரிவதால்தான். இருப்பினும் ஒரு சில கதாப்பாத்திரத்தில் என்ன அழுது புரண்டாலும் நமக்கு நடிப்பு மட்டுமே தெரியுமே தவிர,அந்த கதாப்பாத்திரத்தின் வலி புரியாமல்,வெரும் நடிப்புக்கு மட்டும் விருது வாங்கிவிடும். உதாரணத்துக்கு ,இந்தியில் வெளிவந்த, சல்மான் நடித்த படத்தில் அவர் அழுவதுபோல் ஒரு காட்சி ,அந்த காட்சியை பார்த்து ,திரையரங்கில் அத்தனை பேரும் சிரித்தார்கள்,காரணம் அவர் நடிப்பதுதான் தெரிந்தது தவிற,அந்த கதாப்பாத்திரத்தை உணர வைக்கத் தவறி விட்டார்.இதேபோல், சத்தாரின் கதாப்பாத்திரமும், நடிப்பை மட்டும் காட்டிவிட்டு, அந்த கதாப்பாத்திரத்தின் வலி வேதனைகளை புரிய வைக்கத் தவற விட்டுவிட்டது. கதைப் பற்றி: ...